*
Microsoft*
Results by Bing
தகவலிறக்க மையம் 
தேடவும்
உயர்நிலை தேடல்

Microsoft Visual Studio 2008 க்கான காப்ஷன்ஸ் லாங்க்வேஜ் இன்டர்ஃபேஸ் பேக்

துரித விவரம்
Microsoft காப்ஷன்ஸ் லாங்க்வேஜ் பேக் (CLIP) ஒரு எளிமையான மொழிபெயர்ப்பு கருவியாகும். அதன் மூலம் டூல்டிப் தலைப்புகளில் ஆங்கில பயனர் இடைமுகச் சொற்களுக்கு இணையான மொழிபெயர்ப்புகளை பார்க்கலாம்

இப்பக்கத்தில்

துரித தகவல்கள்
கோப்பின் பெயர்:clip_inTA_TAin.msi
பதிப்பு:1.0
பதிப்பு தேதி:03-11-2008
மொழி:தமிழ்
தகவலிறக்க அளவு:1.5மெ.பை.
உத்தேச தகவலிறக்க நேரம்: 4நிமிடம்56கே

மொழியை மாற்றவும்:
  

மேற்கண்ணோட்டம்

Microsoft காப்ஷன்ஸ் லாங்க்வேஜ் இன்டர்ஃபேஸ் பேக் (CLIP) ஒரு எளிமையான மொழிபெயர்ப்பு கருவியாகும். அதன் மூலம் டூல்டிப் தலைப்புகளில் ஆங்கில பயனர் இடைமுகச் சொற்களுக்கு இணையான மொழிபெயர்ப்புகளை பார்க்கலாம்.

ஆங்கிலத்தில் அவ்வளவாக புலமை இல்லாத Visual Studio பயனர்களுக்கு CLIP உதவும் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் Visual Studio இன்டக்ரேட்டர் டெவலப்மென்ட் இன்டர்பேஸ் (IDE) சார்ந்த பயனர் இடைமுக அம்சங்களுக்கான மொழிபெயர்ப்பை வழங்கி அதன் மூலம் பயனர்கள் எளிதாக Visual Studio 2008 ஐக் கற்கவும் பயன்படுத்தவும் வசதி செய்துதரப்பட்டுள்ளது. Microsoft க்கும் உள்ளூர் கல்வி அமைப்புகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவின் மூலமாக CLIP உருவாகியிருக்கிறது.

அதைப் பயன்படுத்த. உங்கள் கர்சரை திரையில் நகர்த்தி, நீங்கள் மொழிபெயர்த்துப் பார்க்க வேண்டிய உரையின் மீது சிறிது நேரம் நிறுத்தினால் போதும். பயனர்கள் மேலும் சொந்தமாக மொழிபெயர்ப்புகளை சேர்த்துக்கொள்ளலாம், அதைப் பிரதி எடுத்து வேறோரு இடத்தில் ஒட்டிக்கொள்ளவும் செய்யலாம்.

 பக்கத்தின் மேல்பகுதி

இயங்குதள தேவைகள்

  • ஆதரவு கொண்ட இயக்குதளங்கள்: Windows Server 2003 Service Pack 2; Windows Server 2008; Windows Vista Service Pack 1; Windows XP Service Pack 3
இந்த பதிவிறக்கம் பின்வருவனவற்றுக்கு ஏற்றபடி தனிப்பயனாக்கப்பட்டது:

  • Microsoft Visual Studio 2008 Professional Edition

  • Microsoft Visual Studio 2008 Standard Edition

  • Microsoft Visual Basic 2008 Express Edition

  • Microsoft Visual C# 2008 Express Edition

  • Microsoft Visual C++ 2008 Express Edition

  • Microsoft Visual Web Developer 2008 Express Edition



முன்-தேவைகள்:

  • Microsoft CLIP நிறுவல் செய்வதற்கு பயனரின் கணினியில் .NET ஃப்ரேம்வொர்க் 2.0 அல்லது அதைவிடசிறந்த பதிப்பு நிறுவப்பட்டிருக்கவேண்டும். .NET ஃப்ரேம்வொர்க் Visual Studio இன் ஒரு பகுதியாக ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால் நீங்கள் வேறுஏதும் செய்யவேண்டியதில்லை. ஆனால், உங்கள் கணினியிலிருந்து ஏதோ காரணங்களால் நீங்கள் .NET ஃப்ரேம்வொர்க்கை நீக்கியிருந்தால், CLIP ஐ நிறுவும் முன்பு முதலில் அதனை நிறுவுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

  • Microsoft Windows XP அல்லது Windows Server 2003 இன் ஆங்கிலப் பதிப்பில், நீங்கள் Microsoft CLIP ஐ நிறுவுகிறீர்கள் என்றால், கூட்டெழுத்து வரிவடிவங்களுக்கான உதவியை நிறுவிய பிறகே CLIP ஐ நிறுவமுடியும். அதற்கு, ஸ்டார்ட் பட்டனுக்குச் சென்று, கன்ட்ரோல் பேனல் ஐ திறந்திடுங்கள். பிறகு ரீஜினல் அண்டு லாங்குவேஜ் ஆப்ஷன்ஸ் வசதியைத் தேர்ந்தெடுங்கள். லாங்க்வேஜ் டேபைத் திறந்து, இன்ஸ்டால் ஃபைல்ஸ் ஃபார் காம்ப்ளெக்ஸ் ஸ்கிரிப்ட் அண்டு ரைட் டு லெஃப்ட் லாங்குவேஜ் (இன்க்ளூடிங் தாய்) விருப்பத் தேர்வைத் தேர்ந்தெடுங்கள். இப்பொது இதற்காக நீங்கள் உங்கள் கணினியை ரீபூட் செய்யவேண்டியிருக்கலாம். அல்லது, Windows XP க்கான மொழி இடைமுக தொகுப்பை நீங்கள் நிறுவலாம்.

நீங்கள் Windows Vista இன் ஆங்கிலப் பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் தமிழுக்கான லாங்க்வேஜ் இன்டர்ஃபேஸ் பேக்கை (LIP) நிறுவிக்கொள்ள முடியும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். Windows Server 2008 தமிழ் மொழிக்கு மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதால், அதற்கான LIP கிடையாது. ஆனால் அதில் தமிழ் மொழியைப் பயன்படுத்த வசதி உண்டு.

 பக்கத்தின் மேல்பகுதி

நெறிமுறைகள்

இந்த பதிவிறக்கத்தை நிறுவ:

  • மென்பொருளை நிறுவ திரையில் காட்டப்படும் வழிகாட்டுக் குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.

  • நிறுவல் முடிந்தபிறகு, CLIP தானாகவே இயங்கத்தொடங்கும்.


பயன்படுத்துவதற்கான குறிப்புகள்:


  • ஒரு முறை நிறுவிய பிறகு, Microsoft காப்ஷன்ஸ் லாங்க்வேஜ் இன்டர்ஃபேஸ் பேக் (CLIP) ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துவிடுகிறது, மொழிபெயர்ப்புகள் காட்டப்படுகின்றன. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், உங்கள் கர்சரை திரையில் நகர்த்தி, நீங்கள் மொழிபெயர்த்துப் பார்க்க வேண்டிய உரையின் மீது சிறிது நேரம் நிறுத்துவது மட்டுமே.

  • மொழிபெயர்ப்பு முடிவுகளைக் காட்ட இரண்டு விதமான இடைமுகங்கள் உண்டு: டூல்டிப் தலைப்பு மற்றும் CLIP விண்டோ. மொழிபெயர்ப்புகள் எவ்வாறு காட்டப்பட வேண்டும் என்பதை அமைத்துக்கொள்ள, CLIP விண்டோவில் ஆப்ஷன்ஸ் பட்டனைப் பயன்படுத்துங்கள் (இரண்டு சுத்தியல்கள் தோன்றும் படம்) அல்லது சிஸ்டம் ட்ரே மெனுவில் ஆப்ஷன்ஸ் ஐப் பயன்படுத்துங்கள்

  • ஒரு பயனர் மொழிபெயர்ப்பைச் சேர்த்துக்கொள்ள, CLIP விண்டோவில் ஏட் அ டிரான்ஸ்லேஷன் பட்டனை (ஒரு கூட்டல் குறி போல தோன்றுவது) கிளிக் செய்யுங்கள். ஒரு சமயத்தில் 1 பயனர் மொழிபெயர்ப்பை மட்டுமே வைத்துக்கொள்ளமுடியும். மேலும், ஒரு பயனர் மொழிபெயர்ப்பைச் சேர்த்து முடிக்கும் வரை CLIP வேறு மொழிபெயர்ப்புகளைக் காட்டாது.

  • ஒரு பயனர் மொழிபெயர்ப்பைத் திருத்த, CLIP விண்டோவில் உள்ள பயனர் மொழிபெயர்ப்பை தேர்வு செய்து, மொழிபெயர்ப்பு உரைப்பெட்டியில் உள்ள கீழ்நோக்கு அம்புக்குறியை கிளிக் செய்யுங்கள். இயல்புநிலை மொழிபெயர்ப்புகளை திருத்தமுடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

  • நீங்கள் தேர்ந்தெடுத்த உரைக்கு CLIP விண்டோவைப் பெற, CLIP Window Key + Hot-key என அழுத்துங்கள். பிறகு நீங்கள் கர்சரை சற்று நகர்த்தி தேர்வு மெனுவைத் தோன்ற விடுங்கள். காப்பி மெனுவைப் பயன்படுத்தி, மொழிபெயர்ப்பு முடிவுகளைப் பிரதியெடுத்து பிற ஆவணங்களில் ஒட்டிக் கொள்ளலாம்.

  • CLIP ஐ தற்காலிகமாக நிறுத்த அல்லது இயக்க, சிஸ்டம் ட்ரே ஐகானை டபுள்-கிளிக் செய்யுங்கள். CLIP ஐ நிறுத்த எக்ஸிட் ஐ பயன்படுத்துங்கள்.

  • சில சமயங்களில் CLIP டூல்டிப் தலைப்பு Visual Studio பட்டன் டூல்டிப்புகளுக்குக் கீழே தோன்றக்கூடும். அப்படியெனில் நீங்கள் Visual Studio டூல்டிப்ஸை முடக்கிவைக்க விரும்பலாம்; அதைச் செய்ய டூல்ஸ் மெனுவுக்குச் சென்று, கஸ்டமைஸ் தேர்வுசெய்து, பிறகு ஷோ ஸ்க்ரீன்டிப்ஸ் ஆன் டூல்பார்ஸ் விருப்பத் தேர்வை தேர்வுநீக்கம் செய்யுங்கள்.

இந்த பதிவிறக்கத்தை அகற்ற:

  • ஸ்டார்ட் மெனு சென்று, கன்ட்ரோல் பேனலைத் திறந்திடுங்கள்.

  • ஏட் ஆர் ரிமூவ் புரோகிராமஸ்ஸை தேர்ந்தெடுங்கள்.

  • அதில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களின் பட்டியலில் Microsoft காப்ஷன்ஸ் இன்டர்ஃபேஸ் பேக்கைத் தேடி எடுத்து, நீங்கள் நீக்கவிரும்பும் மொழியை நிறுவல் நீக்கம் செய்யுங்கள்.

  • ரிமூவ் அல்லது ஏட்/ரிமூவ் பட்டனைக் கிளிக் செய்யுங்கள். டயலாக் பாக்ஸ் ஒன்று தோன்றினால், அது காட்டும் வழிகாட்டுக் குறிப்புகளைப் பின்பற்றி மென்பொருளை அகற்றுங்கள்.

  • நீங்கள் மென்பொருளை அகற்ற விரும்புகிறீர்களா என்பதை உறுதிப்படுத்த Yes அல்லது OK கிளிக் செய்யுங்கள்.

 பக்கத்தின் மேல்பகுதி

கூடுதல் தகவல்கள்

நீங்கள் Windows Vista ஆங்கிலப் பதிப்பைப் பயன்படுத்துகிறவராக இருந்தால், நீங்கள் பயன்படுத்த வசதியாக ஒரு தமிழ் லாங்க்வேஜ் இன்டர்ஃபேஸ் பேக் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

 பக்கத்தின் மேல்பகுதி

 பக்கத்தின் மேல்பகுதி


©2013 Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.   எங்களிடம் தொடர்புக் கொள் |ஒப்பந்த விதிமுறைகள் |Trademarks |பிரைவேசி ஸ்டேட்மெண்ட்