Silverlight நிறுவ இங்கு க்ளிக் செய்யவும்*
தமிழ்மாற்று|எல்லா Microsoft இடங்களும்
Microsoft
தகவலிறக்க மையம் 
தேடவும்
உயர்நிலை தேடல்

Microsoft Visual Studio 2010 க்கான காப்ஷன்ஸ் லாங்க்வேஜ் இன்டர்ஃபேஸ் பேக்

துரித விவரம்
Microsoft காப்ஷன்ஸ் லாங்க்வேஜ் இன்டர்ஃபேஸ் பேக் (CLIP) என்பது டூல்டிப் காப்ஷன்களைப் பயன்படுத்தி ஆங்கிலப் பயனர் இடைமுகச் சொற்களின் மொழிபெயர்ப்புகளைக் காட்சிப்படுத்தும் ஒரு எளிமையான மொழிபெயர்ப்புக் கருவியாகும்.

இப்பக்கத்தில்

துரித தகவல்கள்
பதிப்பு:v2.0
பதிப்பு தேதி:10-08-2010
மொழி:தமிழ்
தகவலிறக்க அளவு:156கி.பை. - 2.8 மெ.பை.*
*Dதகவலிறக்கப்படும் கோப்புகளின்படி, அளவானது மாறுபடும்.

மொழியை மாற்றவும்:
  

மேற்கண்ணோட்டம்

Microsoft Captions Language Interface Pack (CLIP) என்பது டூல்டிப் காப்ஷன்களைப் பயன்படுத்தி ஆங்கிலப் பயனர் இடைமுகச் சொற்களின் மொழிபெயர்ப்புகளைக் காட்சிப்படுத்தும் ஒரு எளிமையான மொழிபெயர்ப்புக் கருவியாகும்.

ஆங்கிலம் நன்கு அறிந்திராத Visual Studio பயனர்களுக்காக CLIP வடிவமைக்கப்பட்டுள்ளது. Visual Studio 2010 -ஐக் கற்றுக்கொண்டு பயன்படுத்தும் பயனர்களுக்கு CLIPமிகப் பொதுவாகப் பயன்படுத்தும் Visual Studio இன்டக்ரேட்டர் டெவலப்மென்ட் இன்டர்பேஸ் (IDE) சார்ந்த பயனர் இடைமுக அம்சங்களுக்கான மொழிபெயர்ப்பை வழங்கி உதவுகிறது. சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைந்து CLIP மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பயன்படுத்துவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் கர்சரை நகர்த்தி நீங்கள் மொழிபெயர்க்க வேண்டிய உரையின் மீது சிறிது நேரம் வைக்கவேண்டும் அவ்வளவுதான். பயனர் தன்னுடைய சொந்த மொழிபெயர்ப்பையும் சேர்க்கமுடியும், மேலும் எந்த ஒரு மொழிபெயர்ப்பு முடிவுகளையும் நகலெடுத்து ஒட்டலாம்.

 பக்கத்தின் மேல்பகுதி

இயங்குதள தேவைகள்

  • ஆதரவு கொண்ட இயக்குதளங்கள்: Windows 7; Windows Server 2003 R2 (32-Bit x86); Windows Server 2003 R2 x64 editions; Windows Server 2003 Service Pack 2; Windows Server 2008 R2; Windows Server 2008 Service Pack 2; Windows Vista Service Pack 2; Windows XP Service Pack 3



இந்தப் பதிவிறக்கம் பின்வருவனவற்றுக்கு ஏற்றபடி தனிப்பயனாக்கப்பட்டது:

  • Visual Studio 2010 Professional

  • Visual Basic 2010 Express

  • Visual C# 2010 Express

  • Visual C++ 2010 Express

  • Visual Web Developer 2010 Express



முன்-தேவைகள்:

  • பயனரின் கணினியில் .NET Framework 3.5 நிறுவப்பட்டிருக்க வேண்டிய தேவை Microsoft CLIP-க்கு உள்ளது.

  • Microsoft Windows XP அல்லது Windows Server 2003 இன் ஆங்கிலப் பதிப்பில், Microsoft CLIP ஐ நிறுவுகிறீர்கள் என்றால், கூட்டெழுத்து வரிவடிவங்களுக்கான உதவியை நிறுவிய பிறகே CLIP ஐ நிறுவமுடியும். அதற்கு, தொடங்கு பட்டனிலிருந்து கண்ட்ரோல் பேனலைத்திறந்து மண்டலம் மற்றும் மொழித் தெரிவுகளைத் தேர்ந்தெடுக்கவும். மொழி டேபைத் திறந்து, கூட்டெழுத்து வரிவடிவங்கள் மற்றும் வலதிலிருந்து இடது மொழிக்கான (தாய் உட்பட) கோப்புகளை நிறுவவும் என்ற தெரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு நீங்கள் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யவேண்டியிருக்கும். இதற்குப் பதிலாக, Windows XP க்கான மொழி இடைமுகத் தொகுப்பை நீங்கள் நிறுவலாம்.

  • நீங்கள் Windows Vista அல்லது Windows 7 பயன்படுத்திக்கொண்டிருந்தால், நீங்கள் நிறுவுவதற்குத் தமிழ் இடைமுகத் தொகுப்பு (LIP) கிடைக்கிறது என்பதைத் தயவுசெய்து நினைவில் கொள்ளவும். Windows Server 2008 தமிழில் மொழி பெயர்க்கப்படவில்லை, மேலும் LIP கிடையாது, ஆனால் அது தமிழ் மொழிக்கு ஏற்புடையது.

 பக்கத்தின் மேல்பகுதி

நெறிமுறைகள்



இந்தப் பதிவிறக்கத்தை நிறுவுவதற்கு:

  • திரையில் தெரியும் நிறுவுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  • நிறுவல் முடிந்தபிறகு, CLIP தானாகவே இயங்கத் தொடங்கும்.


பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்:


  • நிறுவப்பட்டவுடன், Microsoft Captions Language Interface Pack (CLIP) இயக்கப்பட்டு, மொழிபெயர்ப்புகளைக் காட்சிப்படுத்தத் தயாராக உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் கர்சரை நகர்த்தி நீங்கள் மொழிபெயர்க்க வேண்டிய உரையின் மீது சிறிது நேரம் வைக்கவேண்டும் அவ்வளவுதான்.

  • மொழி பெயர்ப்பு முடிவுகளைக் காண்பிப்பதற்கு இரண்டு வகை இடைமுகப்புகள் உள்ளன: CLIP window வுக்கான Tooltip காப்ஷன். மொழி பெயர்ப்புகள் எப்படி எப்போது காண்பிக்கப்படுகிறது என்பதைத் தேர்ந்தெடுக்க, CLIP window வில் (இரட்டை சுத்தியலால் குறிக்கப்பட்டுள்ளது) தெரிவுகள் -ஐப் பட்டன், அல்லது சிஸ்டம் ட்ரே மெனுவில் உள்ள தெரிவுகள் பயன்படுத்தி உங்கள் முன்னுரிமைகளை அமைக்கவும்.

  • பயனர் மொழி பெயர்ப்பைச் சேர்க்க, CLIP window வில் உள்ள புதிய மொழி பெயர்ப்பு சேர் பட்டன் (கூட்டல் குறியால் குறிக்கப்பட்டுள்ளது) மீது கிளிக் செய்யவும். ஒரு நேரத்தில் 1 பயனர் மொழி பெயர்ப்பை மட்டுமே கொண்டிருக்கலாம் என்பதை க் குறித்துக் கொள்ளவும். மேலும், பயனர் மொழி பெயர்ப்பை நீங்கள் சேர்த்து முடிக்கும் வரை CLIP பிற மொழி பெயர்ப்புகளைக் காண்பிக்காது.

  • பயனர் மொழிபெயர்ப்பைத் திருத்த, CLIP window வில் உள்ள பயனர் மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்பு உரைப் பெட்டியில் உள்ள கீழ் நோக்கிய அம்புக்குறிமீது கிளிக் செய்யவும். இயல்புநிலை மொழிபெயர்ப்புகள் திருத்தக்கூடியவை அல்ல என்பதைக் குறித்துக் கொள்ளவும்.

  • நீங்கள் தேர்ந்தெடுத்த மூல உரைக்கான CLIP window வை அணுக, CLIP Window விசை + Zஐ அழுத்தவும். தெரிவு மெனுவை மேலே கொண்டுவர, நீங்கள் கர்சரை சிறிது நகர்த்தவேண்டியிருக்கலாம். Copy மெனுவைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்புகளை, பயனர் நகலெடுத்து பிற ஆவணங்களில் ஒட்டலாம்.

  • CLIP ஐத் தற்காலிகமாக நிறுத்த அல்லது தொடங்க, சிஸ்டம் ட்ரே ஐகான் மீது இரண்டுமுறை கிளிக் செய்யவும். CLIP ஐ அணைப்பதற்கு வெளியேறு -வை பயன்படுத்தவும்.

  • சில நேரங்களில் CLIP டூல்டிப் காப்ஷன் Visual Studio பட்டன் டூல்டிப்புகளுக்குக் கீழே காட்சிப்படுத்தப்படும். ஆகவே நீங்கள் Visual Studio டூல்டிப்புகளை முடக்கத் தேர்ந்தெடுக்கலாம்; அவ்வாறு செய்வதற்கு, Visual Studio வில் உள்ள Tools மெனுவுக்குச் சென்று, Customize தேர்ந்தெடுத்து Show ScreenTips on Toolbars என்ற தெரிவைக் குறி நீக்கவும்.

இந்தப் பதிவிறக்கத்தை நீக்குவதற்கு:

  • தொடக்க மெனுவிலிருந்து கண்ட்ரோல் பேனலைத் திறக்கவும்.

  • நிரல்கள் சேர்அல்லது நீக்கு தேர்ந்தெடுக்கவும்.

  • தற்போது நிறுவப்பட்டுள்ள நிரல்கள் பட்டியலில் Microsoft Captions Language Interface Pack ஐத் தேடி நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியை நிறுவல் நீக்கிவிடவும்.

  • நீக்குஅல்லது சேர்/நீக்கு கிளிக் செய்யவும். ஒரு உரையாடல் பெட்டி தோன்றினால், நிரலை நீக்குவதற்கு அதிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  • நீங்கள் நிரலை நீக்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதி செய்வதற்கு Yes அல்லது OK கிளிக் செய்யவும்.

 பக்கத்தின் மேல்பகுதி

கூடுதல் தகவல்கள்

  • Windows XP, Windows Vista, மற்றும் Windows 7 Microsoft லாங்க்வேஜ் இன்டர்ஃபேஸ் பேக் ஆகியவை தமிழில் கிடைக்கின்றன.
  •  பக்கத்தின் மேல்பகுதி

    இத்தகவலிறக்கத்தில் உள்ள கோப்புகள்

    The இப்பிரிவிலுள்ள இணைப்புகள் தகவலிறக்கத்தில் உள்ள வெவ்வேறு கோப்புகளுக்கு பொருந்தும். தங்களுக்கு மிகவும் பொருந்திய கோப்புகளை தகவலிறக்கம் செய்யவும்.
    கோப்பின் பெயர்:கோப்பு அளவு

    clip_inTA_TAin.msi

    2.7 மெ.பை.

    ta_Clip_for_VS2010.docx

    156 கி.பை.

     பக்கத்தின் மேல்பகுதி

     பக்கத்தின் மேல்பகுதி


    ©2013 Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.   எங்களிடம் தொடர்புக் கொள் |ஒப்பந்த விதிமுறைகள் |Trademarks |பிரைவேசி ஸ்டேட்மெண்ட்