|
மொழி இடைமுகப் பொதி (Language Interface Pack) என்பது வின்டோஸ் விஸ்டா தொழிற்பாட்டுத் தொகுதி அல்லது மைக்ரோசொப்ட் வேர்ட் போன்றவற்றினை பாவனையாளர்கள் தங்களது தேசிய மொழிகளிலேயே பணிபுரியக்கூடிய ஒரு ஏற்பாடாகும். தாய்மொழியிலே உருவாக்கப்பட்ட (பொதுவாக ஆங்கிலம்) கணினியிலே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவற்றினை உள்ளிறக்கம் செய்து இணைத்துக்கொள்வதன் மூலமாக தொழிற்பாட்டுத் தொகுதி மற்றும் புரோகிராம் என்பனவும் அவை தொடர்பான உப பிரிவுகள் மற்றும் வழிகாட்டல் விபரங்கள் போன்றனவும் ஆங்கிலமொழியில் அல்லாது உங்களது தேசிய மொழிகளிலேயே கிடைக்கப்பெறும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
வின்டோஸ் விஸ்டா தொழிற்பாட்டுத் தொகுதி மற்றும் மைக்ரோசொப்ட் ஒபீஸ் 2007 மென்பொருள் பொதி ஆகியன ஏற்கனவே தமிழ்மொழியிலே மொழி இடைமுகப் பொதியாக அறிமுகஞ்செய்யப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றினை உள்ளிறக்கம் செய்து இணைத்துக்கொண்ட பின்னர், மைக்ரோசொப்ட் ஒபீஸ் 2007 மென்பொருளின் கீழுள்ள அடிப்படை வழிகாட்டல் விபரங்கள் (Menu), பட்டன்கள், அறிவுறுத்தல்கள், விபரங்கள் போன்ற பெரும்பாலான அம்சங்களை தமிழ்மொழியிலேயே பெற்றுக்கொள்ள முடிகின்றது. இதன் மூலமாக நேரடியான தமிழ் சொற்கள் தமிழ்மொழியிலே கிடைக்கப்பெறுகின்ற போதிலும் சில தொழில்நுட்பரீதியிலான சொற்கள் நேரடியாக ஆங்கில பதத்திலேயே கிடைக்கப்பெறுகின்றன.
உங்களது கணினியிலே தமிழ்மொழி மொழி இடைமுகப் பொதியினை உள்ளிறக்கம் செய்து இணைத்துக்கொள்வதற்காக நீங்கள் கொண்டிருக்க வேண்டியவை:
றுiனெழறள ஏளைவய தமிழ்மொழி மொழி இடைமுகப் பொதி
ஆiஉசழளழகவ ழுககiஉந 2007 தமிழ்மொழி மொழி இடைமுகப் பொதி
|