இலங்கை மாற்று  |  எல்லா மைக்ரோசொப்ட் இணையத்தளங்கள்
மைக்ரோசொப்ட்

மைக்ரோசொப்ட் இலங்கை

ஆயுபோவன்!

மைக்ரோசொப்ட் இலங்கை

மென்பொருட்களிலும், சேவைகளிலும், தீர்வுகளிலும் உலகத் தலைமை வகிக்கும் மைக்ரோசொப்ட் கூட்டுத்தாபனத்தின் பூரண உரித்துடைய துணை நிறுவனமாக இலங்கையில் 2004 இல் உத்தியோகபூர்வமாகக் கால்பதித்த மைக்ரோசொப்ட் இலங்கை, அதன் பரந்ததும் தாக்குதிறன் மிக்கதுமான நாடுதழுவிய சேவை விஸ்தரிப்புக் காரணமாக இலங்கையில் காத்திரமான ஒரு வியாபாரச் சின்னமாக மாறியுள்ளது.


அலுவலகத்திலும், பாடசாலையிலும், வீட்டிலும் மக்களை வலுவூட்டி அவர்களை மேம்படுத்துகின்ற மென்பொருட்களினை உருவாக்க வேண்டும் எனும் லட்சியப் பணிநோக்கிலிருந்து எழுவதே, இப்புதிய இணைய யுகத்தில் தனிப்பட்ட கணினி மற்றும் அதன் பாவனையாளர்களின் சக்தியையும் அடைவையையும் விஸ்தரிக்க வேண்டும் என மைக்ரோசொப்ட் கொண்டுள்ள கடப்பாடாகும்.


இலங்கையின் தகவல் தொழில்நுட்ப பின்புலத்தினை மீள் வரையறை செய்து நிலைமாற்ற வேண்டும் எனும் தொலைநோக்கினாலேயே மைக்ரோ சொப்ட் இலங்கை உந்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு இலங்கைப் பிரசையிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற புதிய தொழில்நுட்பத் தீர்வுகளைக் கொண்டு வருவதில் கம்பனியானது கடப்பாடு பூண்டுள்ளது. உலகளாவிய தொழில் நுட்பத்திற்கு வழி அமைத்துக் கொடுப்பதனால் மட்டுமல்லாது, ஆற்றலைக் கட்டி எழுப்புவதாலும் தொழில் வாய்ப்பை பெறும் தன்மையினை அதிகரிப்பதனாலும் மற்றும் இலங்கையானது அதன் தொழில் முயற்சிகளைக் கற்பிக்கின்ற, கற்கின்ற மற்றும் அதுதொடர்பாக நடந்து கொள்கின்ற விதத்தை மாற்றுவதனாலும் மைக்ரோசொப்டானது மாற்றத்திற்கான ஓர் ஊக்கியாக இருந்து வருகின்றது.


இலங்கையிலே மைக்ரோசொப்ட் அதன் உற்பத்திகளையும் சேவைகளையும் அதன் உறுதியான பங்காளர்கள் மற்றும் மறுவிற்பனையாளர் வலையமைப்பு மூலம் மேம்படுத்துகின்றது. பங்காளர்களும் மறுவிற்பனையாsர்களும் சரியான உற்பத்தியைச் சரியான நுகர்வோரிடத்தில் கொண்டு சேர்ப்பதில் நிபுணத்துவம் பெற்றிருக்கின்றன. மைக்ரோசொப்ட்டின் பங்காளர்கள் தரச்சான்றுகளைப் பெற்றுக்கொள்ளTம், வளர்ச்சியடைaTம் அவர்களை இயலுமாக்குவதன் மூலம் பங்காளர் சூழியல் முறைமையினை உருவாக்குவதில் மைக்ரோசொப்ட் இலங்கை கண்ணும் கருத்துமாக இருக்கின்றது.


மைக்ரோசொப்ட் இலங்கையின் நடவடிக்கைகளில் அடங்குகின்ற பல்வேWவிதமான கூறுகளாவன: தொழில்முயற்சிப் பங்காளர் குழு (EPG), சிறிய மற்றும் நடுச் சந்தைத் தீர்வுகள் மற்றும் பங்காளர் (SMS&P) குழு, அரசதுறைப் (PS) பிரிவு, அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM) துறை, சந்தைப்படுத்தல் பிரிவு, மற்றும் மைக்ரோசொப்ட் சேவைகள் குழு. மைக்ரோசொப்டின் வாடிக்கையாளர்களுக்கும் அதன் பங்காளர்களுக்கும் cச்சபட்ச பெறுமதியைப் பெற்றுக் கொடுப்பது எனும் மைக்ரோசொப்ட் அணியின் உறுதியான கடப்பாடே வியாபாரச் சின்னத்தினை வலுப்படுத்துவதற்கும் நாடுதழுவிய அடைகைக்கும் இட்டுச் சென்றுள்ளது.


கம்பனியானது பல விருதுகளைப் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டின் 1வது வியாபார உன்னதச் சின்னமாகத் தெரிவு செய்யப்பட்டமை அதில் ஒன்றாகும். 3½ வருட வரலாற்றினை மட்டும் கொண்டிருந்தும், நாட்டின் மிகவும் மதிக்கப்படும் 100 நிறுவனங்களில் ஒன்றாக நியமிக்கப்பட்ட மிக இளமையான நிறுவனமாகவும் மைக்ரோசொப்ட் இலங்கை jpகழ்கின்றது.


இலங்கையில் மைக்ரோசொப்ட் நிலைநாட்டிய சாதனைகள், இலங்கையின் தகவல் தொழில்நுட்பப் பின்புலத்தை நிலைமாற்றுவதற்கு அளப்பரிய உதவிகளைப் புரிந்துள்ளன. ஒரு மாற்ற முகவர் என்ற ரீதியில் மைக்ரோசொப்ட் இலங்கை அதன் பாத்திரத்தினை உபாயமார்க்கமிகு முறையில் முன்னெடுத்துச் சென்றுள்ளது. அது ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, அதன் எண்ணற்ற கல்வி மற்றும் பயிற்சி முன்னெடுப்புகள் மூலமாக 1 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களின் வாழ்வினில் இடம் பிடித்துள்ளது. மைக்ரோசொப்டின் தொலை நோக்குகள் உயர்வானவையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளமையினால், இலங்கையின் தகவல் தொழில்நுட்பப் பின்புலத்தை உண்மையாகவே நிலைமாற்றுவதற்கான புதிய சாளரங்களை அது திறந்து வைக்கத் தயாராகவே இருக்கின்றது.


மைக்ரோசொப்ட் இலங்கையின் அமைவிடம்
11ம் மாடி, DHPL கட்டிடம்,
இல. 42, நவம் மாவத்தை, கொழும்பு - 02
இலங்கை.
மேலதிக தகவல்களுக்கு, மைக்ரோசொப்ட் இலங்கையின் + 11 4765500ல் அழைக்கவும்.


அரசாங்கத்துடனான மைக்ரோசொப்டின் பங்காண்மைகள்


உள்நாட்டுத் தகவல் தொழில்நுட்பத் துறையின் பிரிக்க முடியாத அங்கமாகவும், முக்கியமான பங்களிப்பினராகவும் மைக்ரோசொப்ட் இலங்கை தன்னைத்தானே உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. 21ம் நூற்றாண்டின் தேவைகளையும் வாய்ப்புக்களையும் பூர்த்தி செய்யுமுகமாக உள்நாட்டு தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையினை உந்துவதற்கான அதன் நிலைமாற்றத்தில் கம்பனியானது ஒரு முனைப்பான பங்குபற்றுனராகும். மைக்ரோசொப்டிற்கும் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ICTA ற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலமாக இலங்கையில் மைக்ரோசொப்டின் பிரசன்னம் வசதிப்படுத்தப்பட்டுள்ளது.


இலங்கையில் நிலவும் டிஜிட்டல் இடைவெளியை நிரப்பி, உலகளாவிய தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் இலங்கையினை ஒரு பிரதான செயற்படுனராக மாற்ற வேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்F மைக்ரோசொப்ட் இலங்கை ஆதரவு வழங்குகின்றது. மைக்ரோசொப்ட் இலங்கையானது அதன் “கற்றலில் பங்காளர்கள்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக கல்வி அமைச்சுடன் சேர்ந்து இலங்கையில் கல்விக்காக பெருமளவு பங்களிப்புச் செய்யும் ஒரு தனித்த தனியார் துறை நிறுவனமாக விளங்கி வருகின்றது. ஏற்கனவே நூறு மில்லியன் ரூபா நிதியுதவியானது “கற்றலில் பங்காளர்கள்” நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு உதவியை அடுத்த சில வருடங்களுக்குள் வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் கல்வி முறைமையினுள் ICT னை ஒருங்கிணைத்த அதனை முன்னேற்றுவதற்கான மைக்ரோசொப்டின் ஆதரவினை இந்த அரச – தனியார் பங்காண்மையானது மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது.


அனைத்து இலங்கையர்களுக்கும் தொழில் நுட்பத்தினை கிடைக்கச் செய்வதற்காய் கடப்பாடு பூண்டிருக்கும் கம்பனியானது, அறிவைப் பகிர்தல், தொழில்வாண்மை, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றில் ஒரு புதிa கலாசாரத்தினை மேம்படுத்துவதற்காக அதன் வளங்களையும் நிபுணத்துவத்தினையும் அர்ப்பணிக்கின்றது. வளப்பகிர்வினைப் பல்வேறுபட்ட தொழில் நுட்ப மற்றும் கல்வி ஒன்று கூடல்களுக்கு கொண்டு வருவதன் மூலம், உலகளாவிய ரீதியில் கம்பனியானது அடைந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்ற அறிவுச் செல்வத்தைச் செயற்திறனுடன் பகிர்வதை வலியுறுத்துகின்றது. அரசாங்கத்துடனான கூட்டு ஆற்றல் உருவாக்க நிகழ்ச்சித் திட்டத்தின் பகுதியாக 5000 அரசாங்க ஊழியர்களுக்கு அடிப்படைத் தகவல் தொழில் நுட்பத் திறன் பயிற்சி வழங்குவதற்கு மேலதிகமாக Tech Ed மற்றும் ஏனைய பயிற்சிகள் போன்ற பல்வேறு தொழில் நுட்ப ஒன்று கூடல்கள் மூலமாக நூற்றுக்காணக்கான அரசாங்க ஊழியர்களின் திறன்களை வளர்ப்பதற்கும் மைக்ரோசொப்ட் உதவியுள்ளது.


அரசாங்கத்துடனான உடன்படிக்கையின் பகுதியாக, கம்பனியானது, அதன் மொழி இடைமுக நிகழ்ச்சித் திட்டங்களின் மூலமாக உள்நாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மற்றும் சேவைகளைத் தொடர்ந்து உருவாக்கும். ஏற்கனவே விண்டோஸ் விஸ்டாவானது சிங்களத்தினை அதன் மொழிகளில் ஒன்றாக ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளது. சிங்களத்திலான மைக்ரோசொப்ட் ஒபீஸிற்குத் தேவையான மொழி இடைமுகப் பொதியினை (LIP) உருவாக்குவதில் ICT முகவரும் மைக்ரோசொப்டும் ஒன்று சேர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுகின்றன.