இலங்கை மாற்று  |  எல்லா மைக்ரோசொப்ட் இணையத்தளங்கள்
மைக்ரோசொப்ட்

கமட IT
விஸ்டா மற்றும் ஒபிஸ் 2007 பதிவிறக்கம் தமிழில்

ஆங்கிலத்திற்கும் தகவல் தொழில்நுட்பத்திற்குமான இவ்வாண்டின்போது காலத்தின் தேவைக்கு ஆதரவளிக்குமுகமாகப் பெரியதொரு அளவில் நடவடிக்கையெடுத்து, இலங்கையின் கிராமங்களில் ICT ஆற்றல்களை வலுப்படுத்துவதற்காக மைக்ரோசொப்ட் இலங்கையானது “கிராமத்திற்கு IT” எனப்படுவதும் நாட்டின் மிகவும் பின்தங்கிய கிராமத்துச் சமூகங்களுக்கு ICT யை எடுத்துச் செல்வதைப் பிரதான குறிக்கோளாகக் கொண்டதுமான ஒரு தொடர் செயற்பாட்டினைக் கொண்டுள்ளது.


‘கிராமத்திற்கு IT’ எனப்படும் பரவிச் செல்லும் இந்நிகழ்ச்சித் திட்டமானது அநேக பின்தங்கிய கிராமங்களுக்குச் சேவையை வழங்குவதனாலும், கிராமிய அபிவிருத்தியில் ஈடுபட்டிருக்கும் பிரதான பங்காளர்களுக்காகப் பல செயற்பாடுகளை ஆரம்பிக்க முயற்சிக்கின்ற காரணத்தினாலும், நாட்டின் மிகவும் பின்தங்கிய சமூகங்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றதான ஒரு புதிய யுகத்திற்கு அது அழைப்புவிடுக்கின்றது. உள்நாட்டுத் தகவல் தொழில்நுட்பத் திறன்களை அபிவிருத்தி செய்வதை நோக்கிய மைக்ரோசொப்ட்டின் பங்களிப்பின் ஒரு பகுதியாக இச் செயற்பாடுகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படும். அத்துடன் IT சிந்தனையாளர்கள் மற்றும் ஊருவாக்குனர்களின் அடுத்த தலைமுறையானது கிராமிய இலங்கையின் கிராமங்களிலிருந்தே தோன்ற வேண்டும் என மைக்ரோசொப்ட் விரும்பி எதிர்பார்க்கின்றது.


வருமானத்தினை நிலையானதாக்கும் வளங்களை இப்பிரதேச மக்கள் காண அவர்களுக்கு உதவுதல், நவீன ICT திறன்களின் பயன்பாட்டினூடாக அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல், தமது உள்ளூர் மொழிகளில் கணினி அறிவைப் பெறுவதற்குக் கிராமிய சமூகத்து மக்களுக்குக் கதவுகளைத் திறந்து இணையத்தளத்திற்கான வழிவகைகளை வழங்குதல், ஆங்கில மொழியில் புலமை இல்லாத காரணத்தால் ஏற்பட்டுள்ள கணினிகள் பற்றிய அச்சத்தையும் அதைப் பயன்படுத்துவதில் உள்ள தயக்கத்தையும் போக்குதல் போன்ற நீண்டகாலக் குறிக்கோள்களுடன் இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையை மாற்றும் பொருட்டு கிராமத்திற்கு IT இன் கீழ் நடவடிக்கைகள் நிறுவப்பட்டுள்ளன.


நீண்ட முயற்சி எடுத்து நவீன குறிக்கோளைச் செயற்படுத்துவது “கிராமத்திற்கு IT” குடையின் கீழான பிரதான முயற்சிகளில் ஒன்றாகும். அதன் விளைவுதான் முன்னோடித் திட்டமான சிங்கள மொழி இடைமுகப்பொதி (Sinhala Language Interface Pack – LIP) ஆகும். விண்டோஸ் விஸ்டா ஒப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் மைக்ரோசொப்ட் ஒபீஸ் 2007 ஆகியவற்றிற்கான LIP மென்பொருள் இப்போது கிடைக்கின்றது. அது பட்டிகள் (Menus) பொத்தான்கள் (Buttons) மற்றும் சிங்கள மொழிமூல அறிவுறுத்தல்கள் சகிதம் முதன்மையாக உள்நாட்டிற்கென வடிவமைக்கப்பட்ட பயன்பெறுவோர் அனுபவத்தை வழங்குகிறது. மைக்ரோசொப்ட் இலங்கை மற்றும் இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பு (ICTA) என்பவற்றால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த LIP மென்பொருளானது உள்ளூர் IT பின்னணியில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த நிறுவப்பட்டுள்ளது. அண்மையில் அதிமேதகு சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மைக்ரோசொப்ட் மற்றும் ICTA என்பவற்றிடமிருந்து சிங்கள மொழி இடைமுகப் பொதியின் (LIP) முதற்பிரதி உள்ளடங்கிய ஒரு நினைவுப் படிகத்தைப் பெற்றுக் கொண்டார். அவ்வேளை பேசிய அவர், “தகவல் தொழில்நுட்பம் கிராமிய சமூகத்தைச் சென்றடைவதை மேலும் வழிவகைப்படுத்தியமைக்காகவும் குறிப்பாக மைக்ரோசொப்ட் ஒபீஸ் 2007 மற்றும் விண்டோஸ் விஸ்டா என்பவற்றிற்கான சிங்கள LIP மென்பொருளை சாத்தியமாக்கியமைக்காகவும் மைக்ரோசொப்ட் இலங்கைக்கு நான் இச்சந்தர்ப்பத்தில் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார். மைக்ரோசொப்ட் இலங்கையானது புதிய சிங்கள LIP மென்பொருளின் 10,000 பிரதிகளை நாடு முழுவதிலும் பல்வேறு அரச நிறுவனங்கள், நெனசல மற்றும் விதாதா நிலையங்கள், கிராம சமூக நிலையங்கள் மற்றும் ஏனைய பங்கீட்டாளா்களுக்கு. இலவசமாகக் கிடைக்கச்செய்யும். இம்மென்பொருளை www.microsoft.com/srilanka எனும் இணையத்தளத்திலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாமென்தால்,எவர் எங்கிருப்பினும் அவருக்கு இம்மென்பொருளை கம்பனி உண்மையாகவே கிடைக்கச்செய்கின்றது.


பிரதானமான இம்மென்பொருளின் வெளியீட்டுடன் ‘கிராமத்திற்கு IT’ முயற்சியானது இம்மென்பொருளுடன் இணைத்து வழங்கவென உருவாக்கப்பட்டதும் விண்டோஸ் விஸ்டா மற்றும் ஒபீஸ் 2007 இல் பயன்படுத்தப்படுவதுமான சொற்களின் முழுமையான சிங்கள IT சொற்களஞ்சியத்தின் 5,000 பிரதிகள் மற்றும் 20,000 சிங்கள விசைப்பலகை , ஸ்ரிக்கர்கள் என்பவற்றையும் நன்கொடையாக வழங்கவுள்ளது.


இப்பெரும் முயற்சியின் கீழ் வரும் ஏனைய செயற்பாடுகளில் அடங்குபவை: நெனசல மற்றும் விதாதா மையங்கள் மூலமாக கிராமங்களைச் சென்றடைந்து , அங்கே, தற்போது மையங்களில் இருக்கின்ற உட்கட்டமைப்பு மூலமாக ஒபீஸ் 2007 மற்றும் விண்டோஸ் விஸ்டாவிற்கான ‘சிங்கள இடைமுகங்களினை’ அடைந்து கொள்ளக் கூடியதாக ஆக்குதல்.


LIP இன் அறிமுகத்தைப் பாராட்டி மேலும் மைக்ரோசொப்ட் இலங்கை மற்றும் ICTA ற்கு வாழ்த்துத் தெரிவித்து, மென்பொருள் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசிய விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன “இத்தொழில்நுட்பத்தினை இலங்கையின் சகல பாகங்களுக்கும் பரப்புவதற்காகவும் அதன் செயற்திறன்மிகு பின்பற்றலுக்காகவும் எனது அமைச்சும் நானும் அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை எதிர்பார்த்திருக்கின்றோம். இது தொடர்பாக அவர்கள் எடுத்துள்ள முன்னெடுப்புக்களை நான் மெச்சுகிறேன்” எனவும் கூறினார்.


இதற்கு மேலதிகமாக, கிராமத்திற்கு IT யானது, பிரத்தியேகமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ் உள்ளீட்டு முறைத் தொகுப்பின் (IME) வெளியீட்டினையும் உள்ளடக்குகின்றது. இது தமிழ் யுனிகோட் தராதரத்திற்கு இயைபானதாகும். இதனை மைக்ரோசொப்ட் இலங்கை இணையத்தளமான www.microsoft.com/srilanka விலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.


மைக்ரோசொப்டினதும் அதன் பங்காளர் அமைப்புக்களதும் பிரதிநிதிகள் கிராமிய சமுதாயங்களுக்கு விஜயம் மேற்கொள்கையில் வழங்கும் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவியில், மக்கள் அவர்களுக்கு விருப்பமான உள்ளூர் மொழிகளான சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் கணினியைப் பயன்படுத்துவதற்கு கற்றுக் கொடுத்தல், கிடைக்கக் கூடியதாகவுள்ள நவீன தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்தல், அதன் பயன் பாட்டினால் கிடைக்கும் நன்மைகளையும் வாய்ப்புக்களையும் அறிமுகம் செய்தல் ஆகியவை அடங்குகின்றன. முன்பு தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்த சமுதாயங்களை உலகின் ஏனைய பகுதிகளுடன் இணைப்பதில் மைக்ரோசொப்ட் இலங்கை ஒரு பிரதான பாத்திரத்தை வகிக்கும். தகவல் தொழில் நுட்பத்தினை சிங்கள மொழியில் கற்பிப்பதை இயலுமாக்குவதற்காக மைக்ரோசொப்ட் வரையறையற்ற எதிர்காலப் பாடவிதானத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதான பங்கீட்டாளா் அமைப்புக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும். அவர்கள் அதனைப் பயிற்சி நோக்கங்களுக்காக பயன்படுத்த விரும்பலாம். தொழில் வழிகாட்டல், பாவனையாளரை நேரடியாகப் பயன்படுத்த வைத்தல், விழிப்புணர்வுருவாக்க அமர்வுகள் போன்ற ஏனைய அம்சங்கள் இக்கிராமங்களில் நிகழ்ச்சித் திட்டங்களை மேலும் மேம்படுத்தும்.


24 மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும், ஒரு பாடசாலையில், மல்டிபொயின்ட் தொழில் நுட்பத்தினை மைக்ரோசொப்ட் இலங்கை ஏற்படுத்தும். ஒரு வகுப்பறையிலுள்ள சகல மாணவர்களும் தனிப்பட்ட சுட்டி மூலமாக ஒரு கணினியைப் பயன்படுத்த மல்டிபொயின்ட் அனுமதிக்கின்றது. அதாவது, அதிநவீன தொழில்நுட்ப மேம்பாடுகளின் பாவனை மூலமாக இடைநேர்விளைவான கற்றல் சூழலினை உருவாக்குதலை இது குறிக்கின்றது.


பல மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட அதிநவீன CSR முயற்சியான கிராமத்திற்கு IT னைப் பற்றி நாட்டிற்கான முகாமையாளர் சிரியான் த சில்வா விஜயரத்ன பேசுகையில், “நாம் கிராமத்திற்கு IT எனும் தொனிப்பொருளைத் தெரிவு செய்யக் காரணம், இலங்கையின் உண்மையான கிராமப்புறங்களைச் சென்றடைய வேண்டும் என்ற எமது குறிக்கோளாகும். இச்சமுதாயங்கள், தகவல் தொழில் நுட்பத்தினைப் பொறுத்த அளவில் இதுவரையில் உண்மையிலேயே உதவியையோ, அபிவிருத்தியையோ அல்லது தொழில்நுட்பத்தினையோ சிறிதளவே பெற்றுள்ளன அல்லது பெறவேயில்லை என்றே கூறவேண்டும். ஆங்கிலத்திற்கும் தகவல் தொழில் நுட்பத்திற்குமான இந்த வருடத்தின் போது இது முக்கியமானதாகும், மோதலுக்குப் பின்பான இலங்கையின் இந்தக் காலகட்டத்தில் இது இன்னும் முக்கியமானதாகும்.


கிராமத்திற்கு IT யானது , விண்டோஸ் விஸ்டா மற்றும் ஒபீஸ் 2007 ற்கான சிங்கள மொழி இடைமுகப் பொதியை அடித்தளமாகக் கொண்டுள்ள அதேவேளை, அது முழு மக்கட்தொகையினரும் நன்மை பயக்கும் வகையிலும் பரந்துபட்ட தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராதம்மிற்கு IT யின் ஏனைய சில குறிக்கோள்கள் மிகவும் தனித்துவமானவையும் இலக்கு வைக்கப்பட்டவையுமாகும். எந்த வகையிலும் தகவல் தொழில்நுட்பத்தினை அடைந்து கொள்ள முடியாத, நாட்டின் மிகவும் பின்தங்கிய பல பகுதிகளுக்கு மைக்ரோசொப்ட் இலங்கை சென்று அங்குள்ள சமுதாயங்களுக்கு வழிவகைகளையும் பயிற்சிகளையும் வழங்குவதை நீங்கள் காணலாம். இந்த முயற்சியிலே, ICTA யுடனும், இலங்கை அரசாங்கத்துடனும், விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சுடனும், சமுதாய அடிப்படையிலான பல அமைப்புக்களுடனும், எமது வியாபாரப் பங்காளர்களுடனும், ஏனைய பலருடனும் நாம் பங்காண்மையினை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். மைக்ரோசொப்ட் இலங்கையிலுள்ள எனது அணி, இந்த முயற்சியினால் ஆர்வமும் சக்தியும் பெற்றுள்ளது. இந்த முயற்சிகளினூடாக எமது கிராமிய இலங்கையில் அழி்க்க முடியாத தடத்தினை ஏற்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம்.”