இலங்கை மாற்று  |  எல்லா மைக்ரோசொப்ட் இணையத்தளங்கள்
மைக்ரோசொப்ட்

ஆங்கிலத்திற்கும் தகவல் தொழில்நுட்பத்திற்குமான வருடம்

2009 – ஆங்கிலத்திற்கும் தகவல் தொழில்நுட்பத்திற்குமான வருடம்


2009 ம் ஆண்டினை ஆங்கிலத்திற்கும் தகவல் தொழில்நுட்பத்திற்குமான ஆண்டாகப் பிரகடனப்படுத்தியதில் இருந்து, எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான திறன்களை வழங்குதல் எனும் நீண்டகாலத் திட்டத்துடன் பொதுமக்களின் மத்தியில் ஆங்கிலத்தினதும் தகவல் தொழில்நுட்பத்தினதும் அறிவின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கத்தில் அரசாங்கமானது பல தொடரான செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் திட்டங்களை வகுத்து வருகின்றது.


மேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், நாட்டில் ஆங்கிலத்தையும் தகவல் தொழில்நுட்பத்தினையும் பரந்த அளவில் தகவமைக்க வைப்பதற்காக சனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்திற்கான சனாதிபதி செயலணியின் தலைவராக தொழில் முயற்சி அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும் பிரதி நிதி அமைச்சருமான கலாநிதி. சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.


செயலணியானது, ஆங்கிலத்திற்கும் தகவல் தொழில் நுட்பத்திற்குமென இரண்டு உப செயலணிகளைக் கொண்டுள்ளது. சனாதிபதியின் ஆலோசகரான திரு. சுனிமெல் பெர்ணாண்டோ ஆங்கிலத் தடத்தை ஒருங்கிணைப்பதற்கும், SLASSCOM தவிசாளரும் தொழிற்துறையில் பழுத்த அனுபவமிக்கவருமான ரஞ்சித் பெர்ணாண்டோ தகவல் தொழில்நுட்பத் தடத்தினை ஒருங்கிணைப்பதற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


செயலணியில் சிரேஷ்ட அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்கள் 20 பேர் இருக்கின்றனர். இவர்கள் தமது நிபுணத்துவத்தினை தேசிய முயற்சிக்கு பங்களிப்பாக வழங்குகின்றனர். எதிர்கால சந்ததியினர் உலகளாவிய போட்டித் தளத்திலே வெற்றிகரமாகப் போட்டியிடுவதற்கு இயலுமாவதற்கான அத்தியாவசியத் திறன்களை வழங்குவதிலும்,ஆங்கிலத்திலும் தகவல் தொழில்நுட்பத்திலும் தேசத்தின் ஆற்றல்களை மேம்படுத்துவதிலும் செயலணியின் செயற்பாடுகள் மையம் கொண்டிருக்கும். அதன் பிரதான குறிக்கோளாக, பாடசாலை மாணவர்கள் மத்தியில், தொழிலின் பால் திசைமுகப்படுத்தப்பட்ட ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திறன்களின் மட்டத்தினை உயர்த்துவதனை நோக்கமாகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களினை செயலணி வசதிப்படுத்தும். தகவல் தொழில்நுட்பச் சேவைத் தொழிற்துறையில் அவர்களின் தொழில் வாய்ப்புப் பெறும் தன்மையினை இது அதிகரிக்கும்.


பரந்து சென்று தாக்கம் ஏற்படுத்தக் கூடிய இந்த முன்னெடுப்புக்களுக்கு பெறுமதி சேர்ப்பதற்கென ஏற்கனவே இதனுடன் சேர்க்கப்பட்டுள்ள பல முயற்சிகளைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு மைக்ரோசொப்ட் இலங்கை தயாராக இருக்கின்றது. அதேவேளை, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கும், பூரணமாக நிலைமாற்றப்பட்டதும் எதிர்கால தகவல் தொழில்நுட்பத்தளத்தினை உள்வாங்கத் தயாரானதுமான நாட்டின் பின்புலத்தை நோக்கிய பயணத்தில் ஒரு வெற்றிகரமான மைல்கல்லாக ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான வருடத்தினை ஆக்குவதற்கும் பரந்த வீச்சிலான புதிய செயற்பாடுகளை மைக்ரோசொப்ட் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.


அரசாங்கத்தின் பிரகடனத்திற்கு ஆதரவு வழங்குவதற்கெனத் தயாராக இருக்கும் பல செயற்பாடுகளின் மத்தியில் ‘21ம் நூற்றாண்டிற்கான மென்பொருள்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தினை மைக்ரோசொப்ட் அரம்பித்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டமானது சகல அரச பல்கலைக்கழகங்களிற்கும் அதிநவீன மென்பொருட்களை முற்றுமுழுவதும் இலவசமாக வழங்குகின்றது. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் மாணவர்களுக்கு உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்த அவற்றினை இயலுமாக்குவதே இதன் நோக்கமாகும்.


ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான வருடம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://www.englishandit.lk/ எனும் இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள்.


ஆங்கிலத்திற்கும் தகவல் தொழில்நுட்பத்திற்குமான வருடம்