மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (விண்டோஸ் எக்ஸ்பி சேவைத் தொகுப்பு 2-ல் அடங்கிய பதிப்பு எண்.6) தனியுரிமை அறிக்கை
Updated: 2004-07-06
மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது, தங்களது உடைமை கணிணி பயன்பாட்டில், தாங்கள் விரும்பும் வைகயிலான செயலாற்றல், திறன் மற்றும் வசதிகளை கொண்ட உற்பத்திகளை அளிக்கும் சமயத்தில், தங்களுடைய தனியுரிமையை பாதுகாப்பதற்கும் அயராத முயற்சிகளை மேற்கொள்கின்றது. இத்தனியுரிமை அறிக்கையானது, மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்கு தளம் "விண்டோஸ் எக்ஸ்பி சேவைத் தொகுப்பு 2"-ல் அடங்கிய "இன்டர்நெட் எக்ஸ்புளோரர்" பதிப்பு 6-ற்கான பயன்பாட்டு முறைகளையும், தகவல் திரட்டையும் விளக்குகின்றது. எனினும், இது இப்பயன்பாட்டின் முழுத் தகவல் பட்டியலெனக் கருத இயலாது. இது, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தாரின் மற்றைய நிகழ்நிலை(ஆன்லைன்) அல்லது அகல்நிலை(ஆஃப்லைன்) இணையத்தளங்கள், உருவாக்கங்கள், மற்றும் சேவைகளுக்கு பொருந்தாது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரரானது, இணையத்தில் எளிதாக உலாவி தகவல் திரட்டுதலுக்கும், மற்றைய, அக இணைய(இன்ட்ராநெட்) மற்றும் புற இணையத்தளங்களுடன் தகவல் பரிமாற்றங்கள் நிகழ்த்தவும், ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்களது, இணைய நெறிமுறை(ஐபி) முகவரி போன்ற தகவல்கள், தாங்கள் பார்வையிடும் இணையத் தளங்களுக்கு அனுப்பப்படுகின்றது. இத்தகவல்கள், அந்த தளங்களின் இணைய வழங்கிகளில் (செர்வர்களில்) நிகழ்பதியப்படும். எத்தகைய தகவல்கள், இவ்வாறு பதியப்படுகின்றன, அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பவை அவ்விணையத் தளங்களின் தன்னுரிமைக் கொள்கைகளை பொருத்ததாகும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தங்களது தனியுரிமைகளை பாதுகாத்திட உதவும், அல்லது ஆளுமைப்படுத்தவும் சில வசதிகள் தரப்பட்டுள்ளன. கீழ்வரும் பகுதிகள் இத்தயை வசதிகளை பற்றி விளக்குகின்றன.
தனியுரிமை அறிக்கையிலுள்ள பகுதிகளின் பட்டியல்
On This Page
கட்டுப்படுத்தும் குக்கீஸ்
குக்கீ என்பது என்ன ?
குக்கீ என்பது ஒரு இணைய வழங்கியால் தங்களது நிலைவட்டிற்குள் (ஹார்டு டிஸ்க்) உட்புகுத்தப்படும், ஓரு சிறிய உரைக் கோப்பாகும். இவ்வகை குக்கீகள் தங்களுக்கென தனித்தன்மையுடன் பொருத்தப்படுகின்றன, அவற்றை உட்புகுத்திய களத்திலுள்ள இணைய வழங்கியினால் மட்டுமே அவற்றை படிக்க இயலும். குக்கீகளை பயன்படுத்தி, தங்களது கணிணிக்குள் பயன்பாடுகளை இயக்கவோ அல்லது நச்சுநிரல்களை(வைரஸ்) உட்புகுத்தவோ இயலாது.
பெரும்பான்மையாக, குக்கீகள், ஒரு குறிப்பிட்ட இணைய தளத்திற்குள் தங்கள் வருகையை தனிமைப்படுத்தவும், நேரத்தை சேமிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தாங்கள் இணையத்தளங்கள் வாயிலாக நிகழ்த்தும் கொள்முதல் நிகழ்வுகளில், குக்கீகள் தங்களது தொடர்பு தகவல்களான பெயர், மின்னஞ்சல் முகவரி, மேலும், தற்போதைய தேர்வுகள், போன்றவற்றைத் தன்னகத்தே கொண்டு உதவும். இணைய தளங்களில் தனிப் பார்வையாளர்களின் வருகை நிகழ்வுகளை கண்காணிப்பதில், குக்கீகள் பெரும்பான்மையாக தங்களுக்கென தனித்தன்மையுடனான குறியீடுகளை(ஐடென்டிடி) கொண்டுள்ளன. குக்கீகளில் பதியப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் அவற்றின் பயன்பாட்டு முறைகளை, தங்களுக்கு தெரியப்படுத்துவது, அவற்றை உருவாக்கிய இணைய தளங்களைப் பொருத்ததாகும்.
குக்கீகளை தடுப்பது
தங்களால் குக்கீகளை அனுமதிப்பதற்கோ அல்லது மறுப்பதற்கோ இயலும். தாங்கள், ஒன்று அல்லது மேற்பட்ட குக்கீகளை தடுத்து மறுத்தால், அவற்றை பயன்படுத்தும் இணைய தளங்கள் சரியான முறையில் இயங்காமல் போகலாம். எடுத்துக்காட்டாக, தாங்கள் குக்கீகளை முழுவதுமாக அனுமதிக்காவிடில், சில இணைய தளங்களை பார்வையிட இயலாமல் போகலாம் அல்லது தங்களுக்கேற்ற அமைப்புக்கூறுகளின் (உள்நாட்டு செய்திகள், வானிலை, பங்குச்சந்தை மதிப்புகள், போன்ற) நன்மைகளை பெற இயலாமல் போகலாம்.
தாங்கள் அனைத்து குக்கீகளுக்கும் அனுமதி மறுக்க முடிவெடுத்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் விருப்பத் தேர்வுகளில், உலாவியின் குக்கீகளுக்கான செயலமைப்பை மாற்றியமைக்க கீழ்வருமாறு பயன்படுத்தலாம்.
1. | இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் கருவிகள்(Tools)பட்டியில்,இணைய விருப்பத்தேர்வுகளை(Internet Options)தேர்ந்தெடுத்து, பின்னர்,தனியுரிமை(Privacy)தத்தலை(tab) தேர்ந்தெடுக்கவும். |
2. | நகரும் சுட்டியை(ஸ்லைடர்) அனைத்து குக்கீகளையும் தடுக்கவும். இத்தகைய செயலமைப்பால், எந்தவொரு இணைய தளமும் தங்கள் கணிணிக்குள், குக்கீகளை உட்புகுத்தி சேமிக்க இயலாது. குறிப்பு: அனைத்து குக்கீகளையும் தடுத்தால், மிகுதியான இணைய தளங்களை பார்வையிடுவதை தடுக்க நேரிடும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரின், அடுத்த இரண்டு தனியுரிமை நிலைப்பாடுகளான, உயர்வு, மிதமான உயர்வு, ஆகியவை மிக்க பொருத்தமானவையாகும். மேலும், தனியுரிமை தத்தலிலுள்ள, தள மேலாண்மை உரைப்பெட்டி(டயலாக்) தேர்வின் வாயிலாக, ஒரு குறிப்பிட்ட தளத்திற்கான குக்கீயை தடுக்க இயலும். மேலும் பல தகவல்களுக்கு, தயவுசெய்து இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் நிகழ்நிலை(ஆன்லைன்) உதவியமைப்பை பார்வையிடவும். |
பழைய குக்கீகளை அகற்றல்
முன்பு நிலைவட்டில் சேமிக்கப்பட்ட குக்கீகளை அகற்றும்வரை படிக்க இயலும். உள்ளிருக்கும் அனைத்து குக்கீகளையும் அகற்றுவதற்கு,
1. | இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் கருவிகள்(Tools)பட்டியில், இணைய விருப்பத்தேர்வுகளை(Internet Options)தேர்ந்தெடுக்கவும். |
2. | பொது(General) தத்தலை(tab) தேர்ந்தெடுத்து, தற்காலிக இணைய கோப்புகள்(Temporary Internet Files)பகுதியில், குக்கீகளை நீக்கவும் (Delete Cookies) என்பதை தேர்ந்தெடுக்கவும். |
3. | தற்காலிக இணைய கோப்புகள் பகுதியிலுள்ள, அனைத்து குக்கீகளையும் நீக்க சரி (OK) என்று தேர்ந்தெடுக்கவும். |
மேலாண்மை மற்றும் முறிவு கண்டறிதல் கூடுதல் அமைப்பு
இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் மேலாண்மை கூடுதல் அமைப்பானது, இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இயங்குவதற்கான கூடுதல் அமைப்புகளை அதற்கான பட்டியலில் பார்வையிடவும், செயல்படுத்தவும், முடக்கவும் வசதி செய்கின்றது. கூடுதல் அமைப்புகளுள், உதவி பொருட்கள், ஆக்டிவ்எக்ஸ் கட்டுப்பாடு அமைப்புகள், கருவிபட்டை விரிவாக்கங்கள் மற்றும் உலாவி விரிவாக்க அமைப்புகளும் அடங்கும்.
தங்கள் கணிணியில், கூடுதல் அமைப்பு மேலாண்மையை செயல்படுத்தி, கூடுதல் அமைப்புகளை பார்வையிடவும், மாற்றியமைக்கவும்,
1. | இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் கருவிகள்(Tools)பட்டியில், கூடுதல் அமைப்பு மேலாண்மையை(Manage Add-ons)தேர்ந்தெடுக்கவும். |
2. | ஒரு கூடுதல் அமைப்பை முடக்க, அதனை கூடுதல் அமைப்பு மேலாண்மை உரைப்பெட்டி(டயலாக் பாக்ஸ்) பட்டியலில் தேர்ந்தெடுக்கவும். பின்னர், முடக்கவும்(Disable) என்ற வானொலி பொத்தானை(ரேடியோ பட்டன்) தேர்ந்தெடுக்கவும். |
3. | ஒரு கூடுதல் அமைப்பை செயல்படுத்த, அதனை கூடுதல் அமைப்பு மேலாண்மை உரைப்பெட்டி பட்டியலில் தேர்ந்தெடுக்கவும். பின்னர், செயல்படுத்தவும்(Enable) என்ற வானொலி பொத்தானை தேர்ந்தெடுக்கவும். |
4. | சரி (OK)என்று தேர்ந்தெடுத்து இறுதிபடுத்தவும். குறிப்பு: ஒரு கூடுதல் அமைப்பை முடக்குவது, அதனை கணிணியிலிருந்து நீக்கும் செயலாகாது. அது இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் அதன் செயல்பாட்டை மட்டுமே முடக்குவதாகும். மேலும், பிற மென்பொருட்கள், அதனை செயல்படுத்துவதை முடக்காது. ஒரு கூடுதல் அமைப்பை முடக்குவதனால், அதன் செயல்பாடுகளைச் சார்ந்த இணைய தளங்கள் விருப்பத்திற்கேற்றவாறு இயங்காமல் போகலாம். |
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயங்குவதில் தவறு நிகழும்பொழுது, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின், கூடுதல் அமைப்பு முறிவு கண்டறிதலுக்கான பண்புக்கூறானது, ஏதேனும், கூடுதல் அமைப்புகள் முறிவு சமயத்தில் இயங்கியதா என கண்டறியும். அவ்வாறு இயங்கியிருந்தால், இயங்கிய கூடுதல் அமைப்பைப் பற்றி ஒரு உரைப்பெட்டிச் செய்தியைக் காட்டும். உயர்நிலைத்தேர்வை தேர்ந்தெடுத்தால், கூடுதல் அமைப்பு மேலாண்மை உரைப்பெட்டியானது இயங்கத் தொடங்கும். `தொடரவும்' எனத் தேர்ந்தெடுத்தால், இயல்புநிலை விண்டோஸ் தவறுகள் அறிக்கை உரைப்பெட்டிச் செய்தியைக் காணலாம்.
கூடுதல் அமைப்பு முறிவு கண்டறிதலுக்கான பண்புக்கூறானது இயல்பாகவே(டிஃபால்ட்) செயல்படுநிலையிலிருக்கும். தாங்கள் மேலாண்மையாளராக இருந்து, கூடுதல் அமைப்பு முறிவு மேலாண்மை அல்லது கூடுதல் அமைப்பு முறிவு கண்டறிதல் செயல்பாடுகளை முடக்க விரும்பினால், தொழில்நுட்ப விளக்கங்கள், கீழ்வரும் இணையமுகவரிகளில் இடம்பெற்றுள்ளன:http://go.microsoft.com/fwlink/?LinkId=21836.
மேல்விரியமைப்பு (பாப்-அப்) தடுப்பான்
இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் மேல்விரியமைப்பு தடுப்பான், தாங்களாகவே, செயல்படுத்தும் மேல்விரி சாளர அமைப்புகள் தவிர, தேவையற்ற மேல்விரி சாளர அமைப்புகள் உள்வருவதை தடுக்க உதவும். மேல்விரியமைப்பு தடுப்பான் இயல்பாகவே செயல்படுநிலையிலிருக்கும்.
மேல்விரியமைப்பு தடுப்பானை செயல்நிறுத்துவதற்கு:
1. | இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் கருவிகள்(Tools)பட்டியில், மேல்விரியமைப்பு தடுப்பானை(Pop-up Blocker)தேர்ந்தெடுக்கவும். |
2. | மேல்விரியமைப்பு தடுப்பான் இயங்காநிலை(Turn Off Pop-up Blocker) என்பதை தேர்ந்தெடுக்கவும். |
மேல்விரியமைப்பு தடுப்பான்களை பலவழிகளில் தங்களுக்கேற்றவாறு செயல்படுத்தலாம். அதில், தாங்கள் தேர்வுசெய்யும் இணைய தளங்களின் மேல்விரியமைப்புகளை அனுமதிப்பதும் அடங்கும். மேல்விரியமைப்பு தடுப்பானின் செயலமைப்புப் பகுதிக்கு செல்வதற்கு:
1. | இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் கருவிகள்(Tools)பட்டியில், மேல்விரியமைப்பு தடுப்பானை(Pop-up Blocker)தேர்ந்தெடுக்கவும். |
2. | மேல்விரியமைப்பு தடுப்பான் செயலமைப்பு(Pop-up Blocker Settings) என்பதை தேர்ந்தெடுக்கவும். |
மேலும் பல தகவல்களுக்கு, தயவுசெய்து இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் மேல்விரியமைப்பு தடுப்பான் பற்றிய நிகழ்நிலை(ஆன்லைன்) உதவியமைப்பை பார்வையிடவும்.
நம்பத்தகாத வெளியீட்டாளர்கள்
இணையத்திலிருந்து, தாங்கள் தங்கள் கணிணிக்குள் ஒரு மென்பொருளை உள்ளிறக்க(டவுன்லோடு) தேர்ந்தெடுக்கும்பொழுது , இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் உறுதிபடுத்துதல் தொழில்நுட்பமானது, அம்மென்பொருளின் வெளியீட்டாளர்கள் பற்றிய விவரங்கைள சரிபார்க்க உதவும். உறுதிபடுத்துதல் தொழில்நுட்பமானது, அம்மென்பொருள் முறையாக சான்றளிக்கப்பட்டுள்ளதா அல்லது ஒப்பமிடப்பட்டுள்ளதா (ஒப்பமானது இணைய வெளியீட்டாளர்களின் விவரங்களோடு ஒத்துப் போகின்றனவா, அவை முறையானதா) என சரிபார்க்கும். எனினும், தங்களுடைய கணிணிக்குள் பழுதுகளுடைய பயன்பாடுகள் உள்ளிறக்கப்படுவதையோ அல்லது இயக்கப்படுவதையோ, குறிப்பாக, இத்தொழில்நுட்பம் தடுக்க இயலாது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரரின், நம்பத்தகாத வெளியீட்டாளர்கள் அமைப்பானது, இணையத்திலிருந்து, தங்கள் கணிணிக்குள், தாங்கள் நம்பத்தகாத வெளியீட்டாளர்களின் மென்பொருள் உள்ளிறக்கப்படுவதை(டவுன்லோடு) தடுக்க அனுமதிக்கின்றது. அடையாளமிடப்பட்ட மென்பொருள்(ஆக்டிவ் எக்ஸ் கட்டுப்பாடுகள் போன்றவை) இணைய வாயிலாக, நிறுவப்பட உள்ளபொழுது, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் உறுதிபடுத்துதல் தொழில்நுட்பமானது, தங்களுக்கு அம்மென்பொருள் நிறுவப்படவேண்டுமா என கேள்வி எழுப்பும். தாங்கள் கீழ்வருவனவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்க இயலும்:
| • | மென்பொருளை நிறுவவும், அல்லது |
| • | அம்மென்பொருள் வெளியீட்டாளரின், அனைத்து உட்பொருட்களும் நம்பத்தக்கவை என முடிவெடுத்து, வரும்காலங்களில், தங்களிடம் கேள்வி எழுப்பாமல், கணிணியில் நிறுவவும், அல்லது |
| • | அவ்வெளியீட்டாளரின் ஒப்பமிடப்பட்ட மென்பொருளை தடுக்கவும் |
தாங்கள் ஒரு மென்பொருளை தடுக்க வேண்டுமென தேர்ந்தெடுத்தபின், அதனை ஒப்பமிட பயன்படுத்தப்பட்ட சான்றளிப்பு, தடுக்கப்பட்டவற்றின் பட்டியலில் வைக்கப்படும். அவ்வாறு தடுக்கப்பட்ட சான்றளிப்புடன் கூடிய எந்தவொரு மென்பொருளும் நிறுவப்படலாகாது. சில வெளியீட்டாளர்கள், தங்கள் மென்பொருள்கள் ஒவ்வொன்றிற்கும் வேறுவேறு சான்றளிப்புகளோடு ஒப்பமிடுவர். இச்சமயங்களில், தங்களிடம், அவ்வெளியீட்டார்களின் மென்பொருளை தடுப்பதற்கு, பல முறை கேள்விகள் எழுப்பப்படலாம். தடுக்கப்பட்டவை பட்டியல், ஒரு கணிணியின் அனைத்து பயனீட்டாளர்களுக்கும் பொருந்தும். அதனை, மேலாண்மையாளராக இருக்கும் பயனீட்டாளரால் மட்டுமே, மாற்றியமைக்க இயலும்.
ஒரு மென்பொருள் வெளியீட்டாளரை தடுக்கப்படா நிலைக்கு மாற்றியமைப்பதற்கு:
1. | இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் கருவிகள்(Tools)பட்டியில், இணைய விருப்பத்தேர்வுகளை(Internet Options)தேர்ந்தெடுக்கவும். |
2. | சான்றளிப்புகள் பகுதியில் உட்பொருள்(Content) தத்தலில்(tab), சான்றளிப்புகள்(Certificates)என்பதை தேர்ந்தெடுக்கவும் |
3. | நம்பத்தகாத வெளியீட்டாளர் (Untrusted Publisher) தத்தலை(tab) தேர்ந்தெடுக்கவும் |
4. | தடுக்கப்படா நிலைக்கு மாற்றியமைக்கவேண்டிய மென்பொருள் வெளியீட்டாளரை(Publisher) தேர்ந்தெடுத்து நீக்கவும்(Remove) என்ற பொத்தானை தேர்ந்தெடுக்கவும் |
தானியங்கி முடிப்பான்
இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் தானியங்கி முடிப்பான் அமைப்பானது, விரைவாக இணைய படிவங்களை நிரப்புவதற்கும், முன்னர் பார்வையிட்ட இணைய தளங்களுக்கு விரைவாக செல்லவும் உதவுகின்றது. தானியங்கி முடிப்பானானது, தங்கள் கணிணியின் பதிவகத்தில்(ரெஜிஸ்டரி), தாங்கள் இணைய படிவ உரைப்பெட்டிகளில் உள்ளீடு செய்யும் தகவல்கள் மற்றும் முகவரி பட்டையின் தகவல்களை சேகரித்து பதியச்செய்கின்றது. தாங்கள் அடையாளச்சொற்களுக்கும் தானியங்கி முடிப்பானை தேர்ந்தெடுத்தால், அவை தங்கள் கணிணியில் மறையாக்கு(என்கிரிப்டடு) முறையில் சேமிக்கப்படும்.
தாங்கள் முதல்முறையாக ஒரு இைணய படிவத்தை ஒப்புவிக்கும் பொழுது, ஒரு செய்திப்பெட்டியில், தானியங்கி முடிப்பான் செயல்பாட்டை இயங்குநிலைக்கு மாற்றவேண்டுமா என கேள்வி எழுப்பப்படும். தானியங்கி முடிப்பானை இயங்காநிலைக்கு மாற்றவும், அதனால் சேமிக்கப்பட்ட தகவல் வரலாற்றை அழிக்கவும்:
1. | இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் கருவிகள்(Tools)பட்டியில், இணைய விருப்பத்தேர்வுகளை(Internet Options)தேர்ந்தெடுக்கவும். |
2. | தன்விவர தகவல்கள்(Personal Information) பகுதியில் உட்பொருள்(Content) தத்தலில்(tab), தானியங்கி முடிப்பான் அமைப்பிற்கான தேர்வுப்பெட்டிகளில், பயன்படுத்த விரும்பாதவற்றை தேர்ந்தெடுத்து பெட்டிகளை வெற்றிடமாக்கவும். |
3. | தானியங்கி முடிப்பானால் சேமிக்கப்பட்ட தகவல் வரலாற்றை நீக்குவதற்கு, படிவத்தகவல்களை நீக்கவும்(Clear Forms) மற்றும் அடையாளச்சொல் தகவல்களை நீக்கவும்(Clear Passwords)என்ற பொத்தான்களை தேர்ந்தெடுக்கவும். |
4. | இணைய முகவரி உள்ளீட்டு தகவல்களை அழிப்பதற்கு தகவல் வரலாற்றை நீக்குவதற்கான(Clear History) கீழ்வருவனற்றை வரிசையாக செய்யவும்: |
தகவல் வரலாற்றை நீக்கவும்
இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் தகவல் வரலாற்றுப் பகுதி, சிறிது காலத்திற்கு முன்புவரை தாங்கள் பார்வையிட்ட, இணைய தளங்களுக்கான முகவரி தொடர்புகளின் பட்டியல் மற்றும் விண்டோஸ் உள்ளமைப்பு(ஷெல்) பகுதி விவரங்களை கொண்டுள்ளது. இதில் எந்தவொரு வரலாற்றுத் தகவலும் மைக்ரோசாஃப்டிற்கு அனுப்பப்படுவதில்லை.
தகவல் வரலாற்றுப் பகுதியிலுள்ளவற்றை முற்றிலும் நீக்குவதற்கு:
1. | இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் கருவிகள்(Tools)பட்டியில், இணைய விருப்பத்தேர்வுகளை(Internet Options)தேர்ந்தெடுக்கவும். |
2. | தகவல் வரலாற்று(History) பகுதியில், வரலாற்றுப் பகுதியிலுள்ளவற்றை நீக்கவும்(Clear History) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
|
தகவல் வரலாற்று பகுதியில், இனி சேமிக்கப்பட தேவையில்லையென்றால்:
1. | இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் கருவிகள்(Tools)பட்டியில், இணைய விருப்பத்தேர்வுகளை(Internet Options)தேர்ந்தெடுக்கவும். |
2. | தகவல் வரலாற்று(History) பகுதியில், முகவரிகளை சேமித்து வைப்பதற்கான நாட்கள் (Days to keep pages in history) என்ற புலத்தில் (பீல்டு) 0 என்று மாற்றியமைக்கவும். |
முகவரி பட்டையில் தானியங்கி தேடுதல் வசதி
தாங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் முகவரி பட்டையில், ஏதேனும், உரைத் தகவலை உள்ளீடு செய்து, அது முறையான இணைய முகவரியாக இல்லாத பொழுதும், தானியங்கி தேடுதல் வசதியானது, தங்களை எம்எஸ்என் தேடுதல் அமைப்பிற்கு செல்லச்செய்து, தாங்கள் செல்ல விரும்பிய இணைய தளத்தின் முகவரிக்கு சற்றே இணையான சில முகவரிகளை தங்களுக்கு அளித்து, தங்கள் தேடுதலுக்கு உதவி செய்யும். இவ்வசதியை வழங்க, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஏற்கத்தகாத இணைய முகவரியை(தாங்கள் முகவரி பட்டையில் உரைத்தகவலாக உள்ளீடு செய்த ஏற்கத்தகாத இணைய முகவரி), எம்எஸ்என் இணைய வழங்கிக்கு(சர்வர்) அனுப்பி, அதனிடமிருந்து இணைய முகவரி தேர்வுகளை கணிணிக்கு திரும்ப பெறுகின்றது. எம்எஸ்என் தங்களது கணிணியின் மென்பொருள் மற்றும் வன்பொருள்(ஹார்டுவேர்) பற்றிய தகவல்களை சேகரிக்கின்றது. இத்தகவல்களில், தங்கள் இணைய நெறிமுறை(ஐபி) முகவரி, உலாவி வகை, களப் பெயர்(டொமைன் பெயர்), அணுகிய நேரங்கள், மற்றும் தொடர்புடைய இணைய தளங்களின் முகவரி போன்றவை அடங்கலாம். எம்எஸ்என் தேடுதல் மற்றும் எம்எஸ்என் தங்களைப் பற்றிய தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகின்றது, ஆகியவற்றிற்கான தகவல்களை மேலும் அறிய, கீழ்வரும் எம்எஸ்என் தனியுரிமை அறிக்கை இணையத்தொடர்பில் சென்று பார்வையிடவும், http://go.microsoft.com/fwlink/?linkid=31493.
தானியங்கி தேடுதல் வசதியை இயங்காநிலைக்கு மாற்றியமைப்பதற்கு:
1. | இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் கருவிகள்(Tools)பட்டியில், இணைய விருப்பத்தேர்வுகளை(Internet Options)தேர்ந்தெடுக்கவும். |
2. | உயர்நிலை(Advanced) தத்தலுக்கு செல்லவும். |
3. | முகவரி பட்டையில் தேடவும்(Search from the Address bar) என்ற பகுதியில் முகவரி பட்டையில் தேடலாகாது(Do not search from the Address bar) என்பதை தேர்ந்தெடுக்கவும். |
தன்விவர உதவியமைப்பு
இன்டர்நெட் எக்ஸ்புளோரரின், தன்விவர உதவியமைப்பு வசதி, புதிய இணைய தளங்களை பார்வையிடும்பொழுது, அவை வினவும் தகவல்களை (தங்கள் முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரி போன்றவை) தாங்கள் மீண்டும் மீண்டும் உள்ளீடு செய்ய வேண்டிய நேரத்ைத சேமிக்கும். இச்சேவையை, தகவல்களை தங்கள் கணிணியில் சேமித்து வைத்திருப்பதன் வாயிலாக செய்கின்றது. இதில் எந்தவொரு தகவலும் மற்றவர்களோடு, தங்கள் அனுமதியில்லாமல் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை.
தன்விவர உதவியமைப்பிடமுள்ள தகவல்களை, இணைய தளங்கள் வேண்டும்பொழுது, கீழ்வருவனவற்றை தங்களுக்கு தெரிவிக்கும்:
| • | தகவல் வேண்டுதல் விடுக்கும் தளத்தின் இணைய முகவரி |
| • | தன்விவர உதவியமைப்பிடமுள்ள எந்தவகை தகவல்களை கேட்கின்றது. இதன்வாயிலாக, தாங்கள் தர விரும்பாத சிலத் தகவல்களை விட்டுவிடலாம். |
| • | கொடுக்கப்படும் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும். |
| • | இத்தளத்திற்கு மறையாக்கத் ெதாடர்பு உள்ளதா (செக்யூர் சாக்ெகட்ஸ் லேயர் அல்லது எஸ்எஸ்எல்). |
தன்விவரத் தகவல்களை இணைய தளங்களில் சேமிப்பதற்கு,
1. | இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் கருவிகள்(Tools)பட்டியில், இணைய விருப்பத்தேர்வுகளை(Internet Options)தேர்ந்தெடுக்கவும். |
2. | உட்பொருள் தத்தலை(Content tab) தேர்ந்தெடுக்கவும். |
3. | தன்விவரத் தகவல்(Personal information) பகுதியில், என் விவரம்(My Profile) தன்விவர உதவியமைப்பு பயன்படுத்தக்கூடிய தகவல்களை பார்வையிடவும் மாற்றியமைக்கவும் தேர்ந்தெடுக்கவும். |
பி3பி தனியுரிமை கொள்கைகள்
இன்டர்நெட் எக்ஸ்புளோரரானது, ஒரு இணைய தளத்தின் பி3பி(தனியுரிமை விருப்ப செயல்முறைகளுக்கான தளம்) தனியுரிமை கொள்கைகளை பார்வையிடவும், அதனை, தாங்கள் செயல்படுத்தியுள்ள, தங்களுடைய தனியுரிமை விருப்பத் தேர்வுகளுடன் ஒப்பிட்டு பார்க்கவும் வசதிகள் தந்து உதவுகின்றது. ஒரு இணைய தளத்திற்கு தனியாக பி3பி கொள்கைகள் இல்லையென்றாலும், எழுத்தாக்கமாக அதற்கு தனியுரிமை அறிக்கை இருக்கலாம். அதனை தாங்கள் பார்வையிட இயலும்.
ஒரு இணைய தளத்தின் பி3பி தனியுரிமை கொள்கைகளை பார்வையிடுவதற்கு:
1. | இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பார்வையிடவும்(View) பட்டியில் தனியுரிமை அறிக்கை(Privacy Report) என்பதை தேர்ந்தெடுக்கவும். |
2. | தாங்கள் தனியுரிமை கொள்கையை பார்வையிட விரும்பும் இணைய தளத்தினை இருமுறை க்ளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். |
தாங்கள் பி3பி தனியுரிமை கொள்கையை மறுபார்வையிட்ட பின், தாங்கள் தேர்வுசெய்த இணைய தளங்களுக்கான குக்கீகளுக்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரரானது, எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பகை குறிப்பிடவும். தாங்கள், இவ்விணைய தளங்கள், தங்கள் கணிணியில் குக்கீகளை சேமிப்பதை அனுமதிப்பது அல்லது இல்லையென்பதை, அத்தளங்களின் தனியுரிமை கொள்கைகளை தங்களது கணிணி தனியுரிமை செயலமைப்புகளுடன் ஒப்பிட்டு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தீர்மானிக்கலாம் என்று விரும்பினால், எனது தனியுரிமை செயலமைப்பை பயன்படுத்தவும்(Use my privacy settings) என்பதை தேர்ந்தெடுக்கவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரானது, எப்பொழுதும் இத்தளங்களின் குக்கீகளை தங்கள் கணிணியில் சேமிக்க அனுமதிக்கலாம் என்றால், எப்பொழுதும் இத்தளங்களின் குக்கீகளை கணிணியில் சேமிக்க அனுமதிக்கலாம்(Always allow this site to use cookies) என்பதை தேர்ந்தெடுக்கவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரானது, இத்தளங்களின் குக்கீகளை தங்கள் கணிணியில் ஒருபொழுதும் சேமிக்க அனுமதிக்கலாகாது என்றால், இத்தளங்களின் குக்கீகளை ஒருபொழுதும் சேமித்து பயன்படுத்தலாகாது(Never allow this site to use cookies) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரரால், ஒரு இணைய தளத்தின் பி3பி தனியுரிமை கொள்கையை பார்வையிடக் காட்ட இயலும் என்றாலும், அவ்விணைய தளம், தங்களின் சொந்த தனியுரிமை கொள்கைகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றது என்பதனை சரிபார்க்க இ