Trace Id is missing
பிரதான உள்ளடக்கத்துக்குச் செல்
உள்நுழை

Microsoft® Office Language Interface Pack 2013 – தமிழ்

Microsoft Office Language Interface Pack 2013 - தமிழ் ஆனது Microsoft Office 2013 -இன் பல பயன்பாடுகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட பயனர் இடைமுகத்தை வழங்குகிறது.

முக்கியம்! கீழே ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பது முழுப் பக்க உள்ளடக்கத்தையும் அந்த மொழிக்கு மாற்றும்.

  • பதிப்பு:

    2013

    வெளியிடப்பட்ட தேதி:

    3/4/2013

    கோப்பு பெயர்:

    languageinterfacepack-x64-ta-in.exe

    languageinterfacepack-x86-ta-in.exe

    கோப்பின் அளவு:

    13.5 MB

    13.4 MB

      Microsoft Office Language Interface Pack 2013 - தமிழ் ஆனது பின்வரும் Microsoft Office 2013 பயன்பாடுகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட பயனர் இடைமுகத்தை வழங்குகிறது:

    • Microsoft Excel® 2013

    • Microsoft OneNote® 2013

    • Microsoft Outlook® 2013

    • Microsoft PowerPoint® 2013

    • Microsoft Word® 2013


    • Microsoft Office Language Interface Pack 2013 - தமிழ் -ஐப் பயன்படுத்தி, Office பயன்பாடுகளின் ஆதரிக்கப்பட்ட அசல் நிறுவல் மொழி பதிப்புகளில் வேலை செய்யலாம். மேலும் அந்தப் பயன்பாடுகளுக்கான கட்டளைகளையும் விருப்பங்களையும் தமிழ் -இல் காணலாம்.

      Microsoft Office Language Interface Pack 2013 நிறுவலின்போது, பயனர் இடைமுகத்தின் மொழியை மாற்ற பயனர்களை அனுமதிக்கும் கோப்புகள், இலக்கு நிலை வட்டிற்கு நகலெடுக்கப்படும். நிறுவலுக்குப் பிறகு, Microsoft Office Language Interface Pack 2013 - தமிழ் -இன் திறன்களும் அதுதொடர்பான விருப்பங்களும், Office 2013 பயன்பாடுகளிலும் Microsoft Office 2013 மொழி அமைப்புகள் பயன்பாடுகளிலும் கிடைக்கும்.
  • ஆதரிக்கப்படும் இயக்க முறைமைகள்

    Windows 7, Windows 8

      Microsoft Windows 7 - 32 அல்லது 64 பிட் OS
      Microsoft Windows 8 - 32 அல்லது 64 பிட் OS
      குறிப்பு: உங்கள் மொழிக்கு ஏற்ற ஆதரவை உறுதிசெய்ய உங்கள் இயக்க முறைமைக்கு சமீபத்திய சேவைத் தொகுப்புகளை நிறுவுவதை உறுதிசெய்யவும்.

    மென்பொருள் Office 2013 தொகுப்பின் எந்த பதிப்பும் அல்லது Microsoft Excel, Microsoft OneNote, Microsoft Outlook, Microsoft PowerPoint அல்லது Microsoft Word உள்ள தனித்து இயங்கும் எதுவும் Microsoft Office Language Interface Pack 2013 - தமிழ் -ஐ ஆதரிக்கும். குறிப்பு: உங்கள் Microsoft Office தயாரிப்புகளுக்கு சமீபத்திய Microsoft Office சேவை தொகுப்புகளை நிறுவுவதை உறுதிசெய்யவும். இது சிறந்த பயனர் அனுபவத்தை உறுதிசெய்யும்.

    கணினி மற்றும் செயலி SSE2 அல்லது அதிகமான ஆதரவுடன் 1 GHz செயலி; 2 GB RAM அல்லது அதிகமானது

    வட்டு இடம் கூடுதலாக நிலை வட்டு இடமானது நிறுவப்பட்ட Office 2013 பயன்பாடுகளால் பயன்படுத்தப்படும்,
  • கிடைக்கக்கூடிய நிலை வட்டு இடம் 3 GB.

  • பிற எல்லா கணினித் தேவைகளும் Microsoft Office Language Interface Pack 2013 - தமிழ் உடன் நீங்கள் பயன்படுத்தும் Office 2013 பயன்பாடுகள் போன்றவைதான்.


  • Windows Language Interface Pack உங்கள் இயக்க முறைமை மற்றும் மென்பொருள் பயன்பாடுகளுக்கு ஏற்ற மொழி ஆதரவிற்கு சமீபத்திய Windows 7 அல்லது Windows 8 Language Interface Packகளை நிறுவ பரிந்துரைக்கப்படுகிறது.

    திரையக தெளிவுத்திறன் மற்றும் DPI அமைப்புகள் 1366 x 768 தெளிவுத்திறனில் எளிதாகப் படிக்க பல எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உங்கள் மொழி எழுத்துருவைப் படிப்பதில் சிக்கலிருந்தால் இந்த தெளிவுத்திறனுக்கு அல்லது அதிகமானதுக்கு உங்கள் காட்சி அமைப்புகளைப் புதுப்பிக்கவும். நினைவில்கொள்க: Windows இயல்புநிலை DPI அமைப்பு - 96 DPI -இல் Office 2013 பயன்பாடுகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். 120 DPI அமைப்பைப் பயன்படுத்துவது என்பது Office உரையாடல் அளவுகளை அதிகரிப்பதன் மூலம் சில Office பயன்பாடுகளில் மோசமான Office பயனர் அனுபவத்தை ஏற்படுத்தலாம்.

    வட்டாரம் மற்றும் மொழி விருப்பங்கள் கூடுதலாக கட்டுப்பாட்டுப் பலகத்திலுள்ள வட்டாரம் மற்றும் மொழி விருப்பங்கள் அனைத்தும் Microsoft Office Language Interface Pack 2013 - தமிழ் -இன் மொழியில் அமைக்க பரிந்துரைக்கப்படுகிறது.

  • இந்தப் பதிவிறக்கத்தை நிறுவ:
    1. பதிவிறக்கு பொத்தானைக் (மேலே) கிளிக் செய்து LanguageInterfacePack.exe கோப்பைப் பதிவிறக்கி உங்கள் நிலை வட்டில் சேமிக்கவும்.
    2. அமைவு நிரலைத் தொடங்க உங்கள் நிலை வட்டில் உள்ள LanguageInterfacePack.exe நிரல் கோப்பை இரு கிளிக் செய்யவும்.
    3. நிறுவலை முடிக்க திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
    4. உங்கள் Microsoft Office 2013 Language Interface Pack பயனர் உதவி கோப்பை நிறுவியவுடன் அதை இதில் காணலாம் C:\Program Files\Common Files\microsoft shared\OFFICE15\1097\LIPread.htm.
    5. Office 2010 Language Interface Pack தொப்பைக்கொண்டு Office 2010 -ஐ மேம்படுத்துதல் அல்லது Office 2013 Language Interface Packடனான Office 2013 -இன் முந்தைய பதிப்பு ஆதரிக்கப்படவில்லை. Office 2010 -இன் அடிப்படை நிறுவலை Office 2013 Language Interface Pack மூலம் Office 2013 -க்கு மேம்படுத்த விரும்பினால், இதைச் செய்ய வேண்டும்:
      • Office 2010 Language Interface Pack நிறுவல்நீக்கவும்.
      • Office 2013 அமைவை இயக்கி, மேம்படுத்தல் விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
      • Office 2013 அமைவு முடிந்தவுடன், Office 2013 Language Interface Pack நிறுவி உள்ளமைக்கவும்.



    உங்கள் Office தயாரிப்பை செயல்படுத்தல்:
    "Microsoft Office செயல்படுத்தல் வழிகாட்டியில்" உள்ள அனைத்து நிறுவல் விதிமுறையையும் படிப்பதில் சிக்கலிருந்தால் அல்லது Microsoft Office Language Interface Pack 2013 -ஐப் பயன்படுத்தும்போது அனைத்து நிறுவல் விதிமுறையும் சரியாக காண்பிக்கப்படவில்லை எனில், உங்கள் Microsoft Office தயாரிப்பை செயல்படுத்த, வழிகாட்டியை ரத்துசெய்து உங்கள் தமிழ் தயாரிப்பிற்கு மாறவும்.

    பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்:
    Microsoft Office Language Interface Pack 2013 – தமிழ் -இன் மொழிக்கு உங்கள் இடைமுகத்தை மாற்ற, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

    1. Start\All Programs\Microsoft Office\Microsoft Office Tools மெனுவிலிருந்து Microsoft Office 2013 மொழி விருப்பத்தேர்வுகளைத் தொடங்கவும்.
    2. காட்சி மற்றும் உதவி மொழிகளைத் தேர்வுசெய் என்பதில், காட்சி மொழியில் தேவையான மொழியைத் தேர்ந்தெடுத்து இயல்புநிலையாக அமை பொத்தானைக் கிளிக் செய்யவும்.
    3. திருத்தல் மொழிகளைத் தேர்வுசெய் என்பதில், தேவையான மொழியைத் தேர்வு செய்து, இயல்புநிலையாக அமை பொத்தானைக் கிளிக் செய்யவும்.
    4. சரி பொத்தானைக் கிளிக் செய்யவும்.


    நீங்கள் தேர்ந்தெடுத்த மொழி அமைப்புகள் அடுத்த முறை உங்கள் Office பயன்பாடுகளை தொடங்கும்போது செயல்பாட்டிற்கு வரும்.
    குறிப்பு: Microsoft Office Language Interface Pack 2013 – தமிழ் -இன் மொழிக்கு உதவியை மாற்ற முடியாது. உதவியானது எப்போதும் உங்கள் அசல் நிறுவலின் மொழியிலேயே இருக்கும்.
    எப்போதும் கீழ்த்தோன்றும் பட்டியலில் உங்கள் காட்சி உதவியை அடிப்படை மொழியில் அமைக்கலாம்.

    இந்தப் பதிவிறக்கத்தை அகற்ற:
  • எல்லா Microsoft Office நிரல்களையும் மூடவும்.
  • Windows கட்டுப்பாட்டுப் பலகத்திலுள்ள நிரல்கள் மற்றும் அம்சங்கள் படவுருவில் இருகிளிக் செய்யவும்.
  • நிரலை நிறுவல்நீக்கு அல்லது மாற்று விருப்பத்தில், தற்போது நிறுவப்பட்டுள்ள நிரல்கள் பெட்டியில் உள்ள Microsoft Office Language Interface Pack 2013 – தமிழ் -ஐக் கிளிக் செய்து, பின்னர் நிறுவல்நீக்கு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.