Trace Id is missing
பிரதான உள்ளடக்கத்துக்குச் செல்
உள்நுழை

Microsoft® Office Language Accessory Pack – தமிழ்

Microsoft Office Language Accessory Pack - தமிழ் மூலம் நீங்கள் நிறுவும் மொழியைப் பொறுத்து கூடுதல் திரை, உதவி மற்றும் பிழைத் திருத்தக் கருவிகளைப் பெறலாம்.

முக்கியம்! கீழே ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பது முழுப் பக்க உள்ளடக்கத்தையும் அந்த மொழிக்கு மாற்றும்.

பதிவிறக்கு
  • பதிப்பு:

    2016/2019

    வெளியிடப்பட்ட தேதி:

    15/3/2016

    கோப்பு பெயர்:

    Office2016_LAP_Readme_ta-in.docx

    கோப்பின் அளவு:

    23.9 KB

    Microsoft Office Language Accessory Pack - தமிழ் மூலம் நீங்கள் நிறுவும் மொழியைப் பொறுத்து கூடுதல் திரை, உதவி மற்றும் பிழைத் திருத்தக் கருவிகளைப் பெறலாம்.
    நிறுவிய பிறகு, Microsoft Office Language Accessory Pack - தமிழ் திறன்கள் மற்றும் தொடர்புடைய விருப்பங்கள் Office பயன்பாடுகள் மற்றும் Microsoft Office மொழி விருப்பத்தேர்வு முன்னுரிமைகள் பயன்பாட்டில் கிடைக்கும்.
  • ஆதரிக்கப்படும் இயக்க முறைமைகள்

    Windows 10, Windows 7, Windows 8

      முறைமைத் தேவைகள் தொடர்பான சமீபத்திய தரவிற்கு இணைப்பைப் பார்க்கவும் Office-க்கான முறைமைத் தேவைகள்
      Microsoft Windows 8 - 32 அல்லது 64 பிட் OS
      Microsoft Windows 10 - 32 அல்லது 64 பிட் OS. (ஒருமுறை மட்டுமே வாங்குதல் வசதி கொண்ட Office 2019-ஐ வாங்கிய பயனர்களுக்கு Windows 10 மட்டுமே ஆதரிக்கப்படும் OS ஆகும்)
      குறிப்பு: உங்கள் மொழிக்கான மேம்பட்ட ஆதரவை உறுதிசெய்ய, உங்கள் இயக்க முறைக்கான சமீபத்திய சேவைத் தொகுப்புகள் நிறுவப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளவும்.

    மென்பொருள் Office 2016 (அல்லது புதியது) சூட் அல்லது Microsoft Excel, Microsoft Lync, Microsoft OneNote, Microsoft Outlook, Microsoft PowerPoint அல்லது Microsoft Word கொண்ட எந்தவொரு தனிப் பதிப்பும் Microsoft Office Language Accessory Pack 2016 (அல்லது புதியது) - தமிழ்-ஐ ஆதரிக்கும்.
    கணினி மற்றும் புராஸசர் SSE2 ஆதரவு கொண்ட 1.6 GHz புராஸசர் அல்லது மேம்பட்டது; 4GB RAM; 2 GB RAM (32 பிட்) அல்லது மேம்பட்டது

    வட்டு இடம் நிறுவியுள்ள Office பயன்பாடுகள் பயன்படுத்தும் வன் வட்டு இடத்துடன் கூடுதலாக,
  • 4 GB அளவு இடம் வன் வட்டில் இருக்க வேண்டும்.

  • பிற முறைமைத் தேவைகள் அனைத்தும் Microsoft Office Language Accessory Pack - தமிழ் தொகுப்புடன் பயன்படுத்தும் Office பயன்பாடுகளின் தேவையே ஆகும்.


  • Windows மொழி இடைமுக தொகுப்பு உங்கள் இயக்க முறைமை மற்றும் மென்பொருள் பயன்பாடுகளில் மேம்பட்ட மொழி ஆதரவைப் பெற, சமீபத்திய Windows மொழி இடைமுக தொகுப்பை நிறுவிக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

    திரையகத் தெளிவுத்திறன் மற்றும் DPI அமைப்புகள் ல எழுத்துருக்கள் 1366 x 768 தெளிவுத்திறனில் சிறப்பாக வாசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. உங்கள் மொழி எழுத்துருவை வாசிப்பதில் சிக்கலை எதிர்கொண்டால், இந்தத் தெளிவுத்திறனுக்கு அல்லது தேவைப்பட்டால் உயர் தெளிவுத்திறனுக்கு உங்கள் திரை அமைப்புகளை மாற்றவும். கவனத்தில் கொள்ளவும்: Windows இயல்புநிலை DPI அமைப்பான 96 DPI-இல் Office பயன்பாடுகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றோம். 120 DPI அமைப்பைப் பயன்படுத்துவது, Office உரையாடல் அளவுகளை அதிகரிப்பதன் மூலம் சில Office பயன்பாடுகளில் மோசமான Office பயனர் அனுபவத்தைத் தரலாம்.

    வட்டாரம் மற்றும் மொழி விருப்பங்கள் கட்டுப்பாட்டுப் பலகத்தில் இருக்கும் அனைத்து வட்டாரம் மற்றும் மொழி விருப்பங்கள் கூடுதலாக இந்தMicrosoft Office Language Accessory Pack - தமிழ்-இன் மொழியாக அமைக்கப்படும்.

  • இந்த Language Accessory Pack-ஐ நிறுவ:
    1. Language Accessory Pack நிறுவிக் கோப்பைப் இந்தப் இணைப்பைக் கிளிக் செய்து பதிவிறக்கவும் Language Accessory Pack நிறுவியைப் பதிவிறக்கு
    2. பதிவிறக்கிய பிறகு, இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. நிறுவலை நிறைவு செய்ய, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

    Language Accessory Pack மொழிக்குப் பயனர் இடைமுகத்தை மாற்றவும்
    Language Accessory Pack-ஐ நிறுவிய பிறகு, Office பயன்பாடுகளில் அல்லது Microsoft Office மொழி விருப்பத்தேர்வுகள் பயன்பாட்டில் இருந்து பயனர் இடைமுக மொழியை (தமிழ்)-க்கு மாற்றலாம்.

    மொழி விருப்பத்தேர்வுகள் மூலம் பயனர் இடைமுக மொழிக்கு மாற்ற:

    1. Office மொழி விருப்பத்தேர்வுகள் என்பதைத் தொடங்கவும்.
    2. திருத்தும் மொழிகள் பட்டியலைத்தேர்வுசெய்து, நீங்கள் திருத்தும் மொழியைக் கண்டறிந்து, இயல்புநிலையாக அமை பொத்தானைக் கிளிக் செய்யவும்.
    3. திருத்தும் திரை மற்றும் உதவி மொழிகள் பட்டியலைத் தேர்வுசெய்து, உங்கள் காட்சி மொழியைத் தேர்ந்தெடுத்து, இயல்புநிலையாக அமை பொத்தானைக் கிளிக் செய்யவும்.
    4. சரி என்பதைக் கிளிக் செய்யவும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.

    Office பயன்பாட்டில் இருந்து பயனர் இடைமுக மொழிக்கு மாற்ற:

    1. கோப்பு, விருப்பங்கள்என்பதற்குச் சென்று, மொழி.
    2. திருத்தும் மொழிகள் பட்டியலைத்தேர்வுசெய்து, நீங்கள் திருத்தும் மொழியைக் கண்டறிந்து, இயல்புநிலையாக அமை பொத்தானைக் கிளிக் செய்யவும்.
    3. திருத்தும் திரை மற்றும் உதவி மொழிகள் பட்டியலைத் தேர்வுசெய்து, உங்கள் காட்சி மொழியைத் தேர்ந்தெடுத்து, இயல்புநிலையாக அமை பொத்தானைக் கிளிக் செய்யவும்.
    4. சரி என்பதைக் கிளிக் செய்யவும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.

    நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள மொழி அமைப்புகள் அடுத்த முறை உங்கள் Office பயன்பாடுகளைத் தொடங்கும் போது செயல்படுத்தப்படும்.

    எழுத்துச் சரிபார்ப்பு மொழியை மாற்றுதல்
    Microsoft Office Language Accessory Pack - (தமிழ்)-இல் உங்கள் மொழிக்கான எழுத்துப்பிழை சரிபார்ப்புக் கருவிகள் இருக்கலாம். இதோ தேர்ந்தெடுத்த உரைக்கான எழுத்துச் சரிபார்ப்பு மொழியை மாற்றும் முறை:

    Excel: இயல்புநிலை எழுத்துச் சரிபார்ப்பு மொழியைக் கண்டறிவதற்காக Microsoft Office முதன்மை திருத்த மொழி அமைப்பை Excel பயன்படுத்துகிறது. இதை மாற்ற,கோப்பு என்பதைக் கிளிக் செய்து, விருப்பங்கள். என்பதைக் கிளிக் செய்யவும்.பிழைத்திருத்தவிருப்பத்தைக் கிளிக் செய்து, கிடைக்கும் மொழிகளில் ஒன்றை அகராதி மொழிப் பட்டியலில் இருந்து தேர்வுசெய்யவும்.

    Outlook, PowerPoint, Word மற்றும் OneNote:நீங்கள் எழுத்துப்பிழை சரிபார்க்க விரும்பும் உரையைத் தேர்ந்தெடுத்து, மதிப்பாய்வுஎன்பதைக் கிளிக் செய்து, மொழி பொத்தானைக் கிளிக் செய்து, பிறகு பிழைத்திருத்த மொழியை அமை விருப்பத்தைக் கிளிக் செய்யவும். பட்டியல் பெட்டியில் இருந்து நீங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.