பயன்பாட்டின் பொதுவான உரிம விதிகள்
MICROSOFT STORE, WINDOWS STORE மற்றும் XBOX STORE
அக்டோபர் 2017 புதுப்பிக்கப்பட்டது

இந்த உரிம விதிகள், உங்களுக்கும் பயன்பாட்டு வெளியீட்டாளருக்கும் இடையேயான ஒப்பந்தமாகும். அவற்றைப் படிக்கவும். அவை Microsoft Store, Windows Store அல்லது Xbox Store (இவை ஒவ்வொன்றையும் இந்த உரிம விதிகள் “ஸ்டோர்” என்று குறிக்கின்றது) இலிருந்து நீங்கள் பதிவிறக்கும் மென்பொருள் பயன்பாடுகளுக்குப் பொருந்தும், அதில் தனி விதிகளுடன் பயன்பாடு அளிக்கப்படாவிட்டால் பயன்பாட்டிற்கான எந்தவொரு புதுப்பிப்புகள் அல்லது பிற்சேர்க்கைகளும் அடங்கும், தனி விதிகள் அளிக்கப்பட்டால் அந்த விதிகள் செயலில் இருக்கும்.

பயன்பாட்டைப் பதிவிறக்குவதன் அல்லது பயன்படுத்துவதன் மூலம் அல்லது இவற்றில் எதையாவது முயற்சிப்பதன் மூலம், இந்த விதிகளை ஏற்றுக்கொள்கிறீர்கள். அவற்றை ஏற்கவில்லை எனில், பயன்பாட்டிற்கு உங்களுக்கு உரிமை இல்லை மேலும் அதனைப் பதிவிறக்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

பயன்பாட்டு வெளியீட்டாளர் என்றால் ஸ்டோரில் அடையாளங்காணப்பட்டுள்ளபடி பயன்பாட்டிற்காக உங்களுக்கு உரிமம் வழங்குபவர்.

இந்த உரிம விதிகளுக்கு நீங்கள் இணங்கினால், கீழேயுள்ள உரிமைகள் உங்களுக்குக் கிடைக்கும்.
1. நிறுவல் மற்றும் பயன்படுத்தல் உரிமைகள்; காலாவதி. எங்கள் உபயோக விதிகளில் விவரித்துள்ள முறையில் Windows சாதனங்கள் அல்லது Xbox கன்சோலில் பயன்பாட்டை நிறுவலாம், பயன்படுத்தலாம். எங்கள் உபயோக விதிகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றும் உரிமையை Microsoft கொண்டுள்ளது.
2. இணையம் சார்ந்த சேவைகள்.

a. இணையம் சார்ந்த அல்லது வயர்லெஸ் சேவைகளுக்கான ஒப்புதல். வயர்லெஸ் நெட்வொர்க் உள்ளிட்ட முறையில் பயன்பாடானது இணையம் வழியாகக் கணினிகளுடன் இணைக்கப்பட்டால், இணையம் சார்ந்த அல்லது வயர்லெஸ் சேவைகளுக்காக வழக்கமான சாதனத் தகவல்களை (உங்கள் சாதனம், முறைமை மற்றும் பயன்பாட்டு மென்பொருள் மற்றும் உபகரணங்கள் பற்றிய தொழில்நுட்பத் தகவல்கள் உட்பட ஆனால் வரம்பில்லாமல்) பயன்பாடு இயங்குவதற்காகப் பரிமாற்ற ஒப்புக்கொள்கிறீர்கள். பயன்பாட்டைப் பயன்படுத்தி அணுகப்பட்ட சேவைகளின் உபயோகம் தொடர்பாக பிற விதிகள் வழங்கப்பட்டிருந்தால், அந்த விதிகளும் அமலில் இருக்கும்.

b. இணையம் சார்ந்த சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துதல். எந்தவொரு வழியிலும் இணையம் சார்ந்த சேவைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது அதனைப் பயன்படுத்துபவர்கள் அல்லது வயர்லெஸ் நெட்வொர்க்கைப் பாதிக்கும் வகையில் அதனைப் நீங்கள் பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு முறையிலும் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு சேவை, தரவு, கணக்கு அல்லது நெட்வொர்க்கின் அணுகலைப் பெற முயற்சி செய்யும் வகையில் நீங்கள் சேவையைப் பயன்படுத்தக்கூடாது.

3. உரிமத்தின் நோக்கம். பயன்பாட்டிற்கு உரிமமே வழங்கப்பட்டுள்ளது, விற்கப்படவில்லை. பயன்பாட்டைப் பயன்படுத்துவதற்கு சில உரிமைகளை மட்டுமே இந்த ஒப்பந்தம் வழங்குகிறது. Microsoft உடனான உங்கள் உடன்படிக்கைக்கு இணங்க உங்கள் சாதனங்களில் பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கான திறனை Microsoft முடக்கிவிட்டால், தொடர்புடைய உரிமத்தின் உரிமைகளும் முடக்கப்படும். பயன்பாட்டின் வெளியீட்டாளருக்குப் பிற அனைத்து உரிமைகளும் இருக்கும். இந்தக் கட்டுப்பாட்டை மீறி பொருந்தக்கூடிய சட்டம் உங்களுக்கு அதிக உரிமைகள் வழங்காதபட்சத்தில், இந்த ஒப்பந்தத்தில் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்ட முறையில் மட்டுமே நீங்கள் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்வதற்காக, நீங்கள் சில வழிகளில் மட்டுமே பயன்பாட்டைப் பயன்படுத்த அனுமதிக்கும் எந்தவொரு தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளுக்கும் இணங்க வேண்டும். நீங்கள் இவற்றைச் செய்யக்கூடாது:

a. பயன்பாட்டில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளையும் மீற முயற்சிக்கக்கூடாது.

b. இந்தக் கட்டுப்பாட்டை மீறி பொருந்தக்கூடிய சட்டம் வெளிப்படையாக அனுமதிக்காத எல்லை வரை பயன்பாட்டைப் பிரித்துப் பார்க்கவோ, பகுக்கவோ அல்லது பிரிக்கவோ கூடாது.

c. இந்தக் கட்டுப்பாட்டை மீறி, இந்த ஒப்பந்தம் அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பயன்பாட்டு நகல்களை உருவாக்கக்கூடாது.

d. மற்றவர்கள் நகலெடுக்கும் முறையில் பயன்பாட்டை வெளியிடவோ அல்லது பிற வழிகளில் கிடைக்குமாறு செய்யவோ கூடாது.

e. பயன்பாட்டை வாடகைக்கு விடவோ, குத்தகைக்கு அளிக்கவோ அல்லது கடனுக்கு வழங்கவோ கூடாது.

f. பயன்பாடு அல்லது இந்த ஒப்பந்தத்தை எந்தவொரு மூன்றாம் தரப்புக்கும் இடமாற்றக்கூடாது.
4. ஆவணங்கள். பயன்பாட்டுடன் ஆவணங்கள் அளிக்கப்பட்டிருந்தால், தனிப்பட்ட குறிப்பு நோக்கங்களுக்காக நீங்கள் ஆவணங்களை நகலெடுக்கலாம், பயன்படுத்தலாம்.
5. தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள். பயன்பாடு, அமெரிக்கா அல்லது சர்வதேச தொழில்நுட்பக் கட்டுப்பாடு அல்லது ஏற்றுமதிச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம். பயன்பாட்டினால் பயன்படுத்தப்படும் அல்லது ஆதரிக்கப்படும் தொழில்நுட்பத்திற்குப் பொருந்தும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச ஏற்றுமதிச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு நீங்கள் கண்டிப்பாக இணங்கி நடக்க வேண்டும். இந்தச் சட்டங்களில், இலக்கிடங்கள், இறுதிப் பயனர்கள் மற்றும் இறுதி உபயோகம் தொடர்பான கட்டுப்பாடுகள் அடங்கும். Microsoft பிராண்ட் தயாரிப்புகள் தொடர்பான தகவல்களுக்கு, Microsoft ஏற்றுமதி வலைத்தளத்திற்குச் (http://go.microsoft.com/fwlink/?LinkId=242130) செல்லவும்.
6. ஆதரவுச் சேவைகள். ஏதேனும் ஆதரவுச் சேவைகள் வழங்கப்படுகிறதா என்று கண்டறிய பயன்பாட்டின் வெளியீட்டாளரைத் தொடர்புகொள்ளவும். Microsoft, உங்கள் வன்பொருள் உற்பத்தியாளர் மற்றும் உங்கள் வயர்லெஸ் கேரியர் (இவர்களில் ஒருவர் பயன்பாட்டின் வெளியீட்டாளராக இல்லாத வரை) ஆகியோருக்குப் பயன்பாட்டிற்கான ஆதரவுச் சேவைகளை வழங்கும் பொறுப்பு இல்லை.
7. ஒட்டுமொத்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம், பொருந்தும் எந்தவொரு தனியுரிமைக் கொள்கை, பயன்பாட்டுடன் வழங்கப்பட்ட கூடுதல் விதிகள், பிற்சேர்க்கைகளின் விதிகள் மற்றும் புதுப்பிப்புகளின் விதிகள் ஆகியவை உங்களுக்கும் பயன்பாட்டின் வெளியீட்டாளருக்கும் இடையே பயன்பாட்டிற்காக உள்ள முழு உரிம ஒப்பந்தமாகும்.
8. பொருந்தும் சட்டம்.

a. அமெரிக்கா மற்றும் கனடா. அமெரிக்கா அல்லது கனடாவில் நீங்கள் பயன்பாட்டைப் பெற்றிருந்தால், நீங்கள் வசிக்கின்ற மாநிலம் அல்லது மாகாணத்தின் சட்டங்கள் (அல்லது வணிகமாக இருந்தால் உங்கள் வணிகத்தின் முக்கிய இடம் அமைந்துள்ள பகுதி) இந்த விதிகளின் விளக்கம், சட்டக் கொள்கைகளின் முரண்பாடுகளைப் பொருட்படுத்தாமல் விதிகளை மீறுவதால் ஏற்படும் உரிமைகொரல்கள் மற்றும் அனைத்து பிற உரிமைகோரல்களை (நுகர்வோர் பாதுகாப்பு, நியாயமற்ற போட்டி மற்றும் சட்டக் கடமை கோரிக்கைகள் போன்ற உரிமைகோரல்கள் உட்பட) நிர்வகிக்கும்.

b. அமெரிக்கா மற்றும் கனடா தவிர்த்துப் பிற நாடுகள். பிற நாடுகளில் பயன்பாட்டைப் பெற்றிருந்தால், அந்த நாட்டின் சட்டங்கள் பொருந்தும்.
9. சட்ட அமலாக்கம். இந்த ஒப்பந்தத்தில் சில சட்ட உரிமைகளும் விவரிக்கப்படுகிறது. உங்கள் மாநிலம் அல்லது நாட்டின் சட்டங்களின் கீழ் உங்களுக்குப் பிற உரிமைகளும் இருக்கலாம். உங்கள் மாநிலம் அல்லது நாட்டின் சட்டங்களின் கீழ் உங்களுக்கு இருக்கும் உரிமைகளை மாற்றக் கூறாத வரை இந்த ஒப்பந்தம் மாற்றாது.
10. உத்திரவாதத்தின் பொறுப்புத்துறப்பு. பயன்பாடானது “உள்ளது உள்ளபடி”, “எல்லாத் தவறுகளுடன்” மற்றும் “கிடைக்கும் நிலையில்” வழங்கப்படுகிறது. அதனைப் பயன்படுத்துவதற்கான எல்லா அபாயமும் உங்களைச் சார்ந்ததாகும். பயன்பாட்டின் வெளியீட்டாளர், அவரின் சார்பாக உள்ளவர், Microsoft (Microsoft பயன்பாட்டின் வெளியீட்டாளராக இல்லை என்றால்), பயன்பாடு பயன்படுத்தும் நெட்வொர்க்கின் வயர்லெஸ் கேரியர்கள் மற்றும் எங்கள் தொடர்புடைய இணை நிறுவனங்கள், விற்பனையாளர்கள், முகவர்கள் மற்றும் சப்ளையர்கள் (“உள்ளடங்கும் தரப்பினர்”) ஒவ்வொருவரும் பயன்பாடு தொடர்பாக உங்களுக்கு வெளிப்படையான காப்புறுதிகள், உத்திரவாதங்கள் அல்லது நிபந்தனைகளை வழங்கவில்லை. பயன்பாட்டின் தரம், பாதுகாப்பு, வசதி மற்றும் செயல்திறன் தொடர்பான முழு அபாயமும் உங்களை மட்டுமே சார்ந்ததாகும். பயன்பாட்டில் குறைபாடு இருக்கும் போது, அதற்குத் தேவையான சர்வீஸிங் அல்லது பழுதுபார்ப்பு தொடர்பான செலவு அனைத்தும் உங்களைச் சார்ந்ததாகக் கருதப்படும். இந்த ஒப்பந்தத்தால் மாற்ற முடியாத நிலையில் உங்கள் உள்ளூர் சட்டங்களின் கீழ் கூடுதல் நுகர்வோர் உரிமைகள் உங்களுக்கு இருக்கலாம். உங்கள் உள்ளூர் சட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு, வணிகத்திறன், குறிப்பிட்ட நோக்கத்திற்கானது, பாதுகாப்பானது, வசதியானது மற்றும் எந்த மீறலும் இல்லை உட்பட, எந்த மறைமுக உத்தரவாதங்கள் அல்லது நிபந்தனைகளில் இருந்தும் உள்ளடங்கும் தரப்பினருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
11. நிவாரணங்கள் மற்றும் சேதங்களின் மீதான வரம்பு மற்றும் விலக்கு. சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட எல்லை வரை, உங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு இழப்பீடு பெறுவதற்தான முகாந்திரம் இருந்தால், பயன்பாட்டின் வெளியீட்டாளரிடமிருந்து நீங்கள் கோரும் தொகையானது நீங்கள் பயன்பாட்டிற்காகச் செலுத்திய தொகை அல்லது USD$1.00, இதில் அது அதிகமோ எந்த அளவிற்குள் மட்டுமே இருக்க வேண்டும். தொடர் இழப்பு, இலாபங்கள் இழப்பு, பிரத்யேக, மறைமுக அல்லது தற்செயலான சேதங்கள் உள்ளிட்ட பிற எந்தவொரு நஷ்டத்திலும் பயன்பாட்டின் வெளியீட்டாளரிடமிருந்து இழப்பீடு கோருவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை மற்றும் அத்தகைய உரிமைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விதிகளில் இல்லாத நிலைமையில் உள்ளூர் சட்டத்தின்படி காப்புறுதி, உத்திரவாதம் அல்லது நிபந்தனை இருந்தால் அது பயன்பாடு பதிவிறக்கப்பட்டதில் இருந்து 90 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.

இந்தக் கட்டுப்பாடு இவற்றுக்குப் பொருந்தும்:
பயன்பாட்டுடன் தொடர்புடைய எதுவும் அல்லது பயன்பாடு வழியாகக் கிடைக்குமாறு செய்யப்பட்ட சேவைகள்; மற்றும்
ஒப்பந்தம், காப்புறுதி, உத்திரவாதம் அல்லது நிபந்தனையை மீறுவதால் ஏற்பட்ட உரிமைகோரல்கள்; கண்டிப்பான பொறுப்புடைமை, அலட்சியம் அல்லது பிற சட்டக் கடமைக் கோரிக்கைகள்; சட்ட விதி அல்லது ஒழுங்குமுறையை மீறுதல்; அநீதியான வளம் சேர்ப்பு; அல்லது வேறு ஏதாவது தத்துவம்; பொருந்தும் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட எல்லை வரை மற்றவை.

இவற்றிலும் இது பொருந்தும்:
இந்த நிவாரணம் உங்களுக்கு எந்தவொரு இழப்புகளில் இருந்து முழுமையான இழப்பீட்டை வழங்காது; அல்லது
சேதங்களைப் பற்றி பயன்பாட்டு வெளியீட்டாளர் அறிந்திருந்தாலும் அல்லது அறிந்திருக்கச் சாத்தியம் இருந்தாலும்.